நிலவுக்கு போறாரு விஜய்.. ஆதவ் அர்ஜுனா கொடுத்த ‘தக்’ ரிப்ளை.. மே 4ம் தேதி என்னமோ நடக்கப்போகுது?

சென்னை: தமிழ்நாடு தேர்தல் நடந்த முடிந்த நிலையில், அதன் தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதையும் தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளப்போகிறது என்பதையும் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் தான் வெளிப்படுத்தும்.

தேர்தல் முடிந்த கையோடு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிச் சென்றுவிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோடை வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

Vijay will not going to Australia but he going to Moon - Aadhav Arjuna Thug Reply

அங்கே இளம்பெண்களையும், பொதுமக்களையும் சந்தித்த அவர் தவெக ஃபினிஷ் என்பது போல தனது டிரேட்மார்க் சிக்னலை காட்டிய வீடியோக்கள் நேற்று வைரலாகின.

ஆஸ்திரேலியாவுக்குப் போறாரா விஜய்?: நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் வரும் மே 4ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விஜய் அவருடன் சேர்ந்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குப் போகப் போகிறார் என எதிர் தரப்பினர் நரேட்டிவ் ஒன்றை செட் செய்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். சில செய்தி சேனல்கள் இதை ஒரு கேள்வியாகவே ஆதவ் அர்ஜுனாவிடம் வைக்க அவர் தக் லைஃப் பதிலடியை கொடுத்துள்ளார்.

நிலவுக்குப் போறாரு விஜய்: மே 4ம் தேதி விஜய் ஆஸ்திரேலியாவுக்குப் போகிறாரா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதும், "ஆஸ்திரேலியாவுக்கு இல்லை, மூனுக்கு போகிறார். திமுக தான் ராக்கெட் ரெடி பண்ணிட்டு இருக்கு" என ஆதவ் அர்ஜுனா சொன்னதுமே அந்த செய்தியாளர் ஆஃப் ஆகிவிட்டார். மெ 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், அன்றைய தினம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் தலைவர் எங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மே 4ம் தேதி என்ன நடக்கப்போகுது?: தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்பி ஓட்டுப் போட்டுள்ளார்களா? அல்லது திமுக ஆட்சி தொடரட்டும் என நினைத்துள்ளார்களா? அல்லது அடுத்த 5 வருஷத்தை அதிமுக ஆளட்டும் என நினைத்துள்ளார்களா? என்பது வரும் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகளின் போது தெரிய வரும். தவெக தரப்பு தேர்தல் முடிந்த பின்னரும் கான்ஃபிடன்ட்டாக உள்ள நிலையில், மே 4ம் தேதி என்ன ஆகப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X