Thalapathy 68 - பக்கா அரசியல் ப்ளானில் விஜய்.. தளபதி 68க்கு பிறகு இந்த முடிவா?.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: Thalapathy 68 (தளபதி 68) வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்த பிறகு விஜய் எடுத்திருப்பதாக கூறப்படும் முடிவு குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். சென்னையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்தப் படமானது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஜூன் மாதத்தோடு படத்தின் ஷூட்டிங் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68: லியோ படத்தை முடித்த பிறகு யார் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என கேள்வி எழுந்த சூழலில் அதற்கு நேற்று விடை கிடைத்தது. அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். விஜய்க்கு 68ஆவது படமாகவும், ஏஜிஎஸ்க்கு 25ஆவது படமாகவும், வெங்கட் பிரபுவுக்கு 12ஆவது படமாகவும் அது அமைகிறது. யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.
வெங்கட் பிரபு வெளியிட்ட ஃபோட்டோ: விஜய் படம் இயக்குவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கனவு நனவானது என பதிவிட்டிருந்தார் வெங்கட் பிரபு. அதனையடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். ஆனால் அந்தப் புகைப்படம் பத்து மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், விஜய் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் புகைப்படத்தை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எப்போது ஷூட்டிங்: இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், லியோ ஷூட்டிங் முடிந்த பிறகுதான் தளபதி 68 குறித்த அப்டேட்ஸ் வெளியே வரும். அதுவரை சஸ்பென்ஸ்தான். இந்தப் படத்தில் அஜித் நடிக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
விஜய்யின் புது முடிவு: இந்நிலையில் தளபதி 68 படத்தை முடித்த பிறகு விஜய் ஒரு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபு படத்தை முடித்துவிட்டு ஆறு மாதங்கள் முழு ஓய்வு எடுக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து வேகமாக் படத்தில் நடிக்கும் விஜய் எதற்காக இந்த முடிவு எடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அரசியல் ப்ளானில் விஜய்?: இந்தச் சூழலில் விஜய் அரசியலுக்கு வரும் எண்ணத்தை ரொம்பவே வலுப்படுத்தியிருக்கிறார். அதற்கேற்றபடிதான் அவரது சமீபத்திய நடவடிக்கைகளும் இருக்கின்றன. லியோ ஆடியோ வெளியீட்டு விழாவைக்கூட தென் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அதுதான் காரணம். எனவே இந்த ஆறு மாத கால ஓய்வில் அரசியலில் நுழைவதற்கான அடிப்படைகளை வலுவாக்கிக்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதனால்தான் இந்த ஓய்வு முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











