விஜய் தான் முதல்வர்: TN07 CM 2026 இந்த நம்பர் ஞாபகம் இருக்கா.. சொல்லி அடித்த கில்லி!

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே முதல் முறையாக தேர்தலை சந்தித்து 108 தொகுகளில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற 7-ந்தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அவர் நடித்த The Greatest of All Time (GOAT) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு கார் நம்பர் தற்போது வைரலாகி வருகிறது.

Vijay TVK

சொல்லி அடித்த கில்லி: அந்த படத்தில் காணப்படும் காரின் பதிவு எண் TN07 CM 2026 என்பதுதான். இதில் உள்ள "CM" மற்றும் "2026" என்ற எண்கள், 2026ஆம் ஆண்டு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையுடன் இணைத்து பார்க்கப்படுகிறது. விஜய் கோட் படத்தில் சொன்னபடியே மே 7ந் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார். விஜய் கில்லி போல சொல்லி அடித்துவிட்டார் என அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் தற்போது இணையத்தில் கோட் படத்தின் இந்த கட்சியை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மே 7ந் தேதி பதவியேற்பு: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் நிலையில் நாளை காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதைத்தொடர்ந்து மே 7ந் தேதி பதவியேற்பு நடைபெறும் அப்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. அதே போல வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் 3 நாட்கள் சென்னையிலேயே இருக்கும்படி விஜய் கூறியிருப்பதால் அனைவரும் சென்னையிலேயே உள்ளனர். விஜய்யின் வெற்றியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Read more about: vijay tvk விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X