காலங்காத்தால சாந்தனுவை மெர்சல் ஆக்கிய விஜய்
Recommended Video
சென்னை: புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சாந்தனுவை மெர்சலாக்கியுள்ளார் விஜய்.
கதிர், ஓவியாவை வைத்து மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இராவண கோட்டம் என்ற படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் கே. பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார்.

இராவண கோட்டம் படத்தில் நடிக்கும் சாந்தனு விஜய் ரசிகர் ஆவார். அவர் புதுப்படத்தில் நடிப்பது குறித்து அறிந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்யும் வாழ்த்தியுள்ளார்.
வாழ்த்துக்கள் நண்பா, டைட்டில் செம என்று விஜய் சாந்தனுவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். காலையில் அந்த மெசேஜை பார்த்து மெர்சல் ஆகிவிட்டதாக சாந்தனு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இராவண கோட்டம் படம் சாந்தனுவுக்கு திருப்புமுனையாக அமையட்டும் என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தியுள்ளனர். வாழ்த்திய அனைவருக்கும் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications