கையில் குழந்தையுடன் விஜய்.. செம க்யூட்டாக இருக்கீங்க என டிரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் கையில் குழந்தையுடன் இருக்கும் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு குழந்தைகள் முதல் முதியர்வர்கள் வரை நடனமாடி வருகின்றனர்.
அந்த பாடல் அசால்ட்டாக 50 மில்லியனை கடந்து யூடியூபை கதறவிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

50 மில்லியன்
பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக் வீடியோவான அரபிக் குத்து பாடல் யூடியூபில் 4 நாட்களில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து வேறமாறி டிரெண்டாகி வருகிறது. 10 நாட்களுக்குள் 100 மில்லியனை கடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்பது போல அரபிக் குத்து அசுர வேகத்தில் அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆட்டம் போட வைத்த விஜய்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடல் ஆட்டம் போட வைத்துள்ளது. ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனின் வரிகள் புரியவில்லை இந்த பாடல் சுமார் ரகம் தான் என விமர்சிக்கப்பட்ட வந்த நிலையில் விஜய்யின் பிரசன்ஸ் மற்றும் அனிருத்தின் இசை உலகளவில் பலபேரை நடனமாட வைத்துள்ளது.

கையில் குழந்தையுடன் விஜய்
அரபிக் குத்து பாடலுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், வெளிநாட்டினர் என பலர் ஒரு பக்கம் நடனமாடிக் கொண்டிருக்க கையில் பச்சக் குழந்தையுடன் நடிகர் விஜய் கொடுத்துள்ள பக்காவான போஸ் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். பீஸ்ட் லுக்கிலேயே விஜய் உள்ளார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video


வலிமைக்கும் பீஸ்ட்டுக்கும் போட்டி
இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம், அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என ஏகப்பட்ட பிரிவுகளில் எந்த படம் முன்னிலையை பிடிக்கும் என்கிற போட்டி வலிமை மற்றும் பீஸ்ட் படங்களுக்கு இடையே இருக்கும் என இப்போதே ரசிகர்கள் போட்டா போட்டி போட ஆரம்பித்துள்ளனர். துவண்டு கிடந்த தியேட்டர் ஓனர்கள் எல்லாம் நிச்சயம் இந்த ஆண்டு கலெக்ஷனை அள்ளிவிடலாம் என்கிற உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











