ஆளப்போறான் தமிழன்.. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வாகை சூடிய விஜய்.. ஒட்டுமொத்தமே!

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் பேட்டியிட்ட விஜய் வெற்றி வெற்றுள்ளார்

தவெக தலைவர் விஜய்: 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தன்னம்பிக்கையுடன் களமிறங்கிய தமிழக வெற்றிக்கழகம்கட்சி, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு, இன்று (மே 4) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கையிலேயே முன்னிலை எடுத்த இந்தக் கட்சி, பின்னர் இவிஎம் வாக்குகள் எண்ணிக்கையிலும் அதே நிலையைத் தொடர்ந்து வைத்திருக்கிறது. மாலை 4 மணி நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் சுமார் 110 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது புதிய கட்சிக்கே மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

Vijay won Perambur and Tiruchy East where he contested for this TN Elections 2026

விஜய் வெற்றி பெற்றார்: இதற்கிடையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக கட்சித் தலைவர் விஜய், அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயின் இந்த வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அதிகாலைவே திருத்தணி முருகன் கோவில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதேபோல், நடிகை திரிஷா தனது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, நேரடியாக விஜயின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். மொத்ததில், தமிழக அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றி கழகம், இந்தத் தேர்தல் மூலம் தனது வலிமையை வெளிப்படுத்தி இருக்கிறது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X