ஓட்டு போடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்.. TVK விஜய் போட்ட எக்ஸ் தள பதிவை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தேர்தலுக்கு முன் தினம் மாலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ள தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது எக்ஸ் பதிவில், “தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்!
ஏப்ரல் 23.
தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள்.
எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி,
காலை 7மணியில் இருந்து
12மணிக்குள்,நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும்.
குறிப்பாக,முதியவர்களும்,
பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது.
மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம்.
எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் 'நம் வாக்கு - நம் உரிமை' என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள்.
100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம்.
ஜனநாயகம் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் தான் போட்டியிடும் முதல் தேர்தல் இது, இதில் இவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று அறிவித்ததுமே அரசியல் தளத்தில் சிலர் இது விஜய்யின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்று விமர்சித்தனர். ஆனால் விஜய் அது குறித்து எல்லாம் கவலைப் படாமல் தேர்தல் வேலைகளைப் பார்த்தார். அதேபோல், விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முறையாக பிரசாரம் செய்யவில்லை என்று பலரும் விமர்சித்தனர்.


Click it and Unblock the Notifications