Vijay Yesudas - சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை.. என்ன விஜய் இப்படி சொல்லிட்டாரு?.. முழு விவரம் உள்ளே
திருவனந்தபுரம்: Vijay Yesudas (விஜய் யேசுதாஸ்) அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து பாடகர் விஜய் யேசுதாஸ் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களி திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
வாரிசு நடிகையிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெட்ஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள்.
விஜய் யேசுதாஸ்: இந்நிலையில் பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "படத்துக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து எப்படியும் ஒருவரை பயன்படுத்த நினைப்பது தவறு. அது கெட்ட விஷயம் என்று சொல்ல அனைவரும் பயப்படுவார்கள்.
அந்த பயம்தான்: கிடைத்த வாய்ப்புகள் போய்விடுமோ என்ற பயத்தால் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள். நான் ஒரு ஆணாக இருப்பதால் அவ்வளவு கஷ்டப்படுவதில்லை. ஆனால் இந்தத் தொழிலில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை எதிர்க்க முடியாது. இப்போது சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும் ஒருவரால் எப்படி இப்படி உணர முடிகிறது என்று தெரியவில்லை.
பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்:இந்த விஷயத்தில் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் மட்டும்தான் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தொழிலையும் குறை சொல்ல முடியாது. இந்தத் துறையில் மட்டும் இல்லை அனைத்து துறையிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஏன் கார்ப்பரேட் துறையில்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இருக்கிறது. மக்கள் மாறுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











