சிவகாசி பட வழக்கு: விஜய், அசினுக்கு சம்மன் மேட்டுப்பாளையம்:நடிகர் விஜய், நடிகை அசின் ஆகியோர் டிசம்பர் 1ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி மேட்டுப்பாளையம் நீதிமன்றம்சம்மன் அனுப்பியுள்ளது.விஜய், அசின் ஆகியோர் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவகாசி. இந்த படத்தில் வக்கீல்களைஅவமதிக்கும் விதத்தில் பல்வேறு காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துபல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இதற்கிடையில் வழக்கறிஞர் எம்.ரஹ்மத்துல்லா மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய், அசின்,இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.வழக்கில் முதல் எதிரியாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், 2வது எதிரியாக இயக்குனர் பேரரசு, 3வது எதிரியாக விஜய், 4வதுஎதிரியாக அசின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நவம்பர் 14ம் தேதி தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட் பி.ஆர்.ராமகிருஷ்ணன்விசாரித்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட விஜய், அசின், பேரரசு, ஏ.எம்.ரத்னம் ஆகியோர் வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
மேட்டுப்பாளையம்:
நடிகர் விஜய், நடிகை அசின் ஆகியோர் டிசம்பர் 1ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி மேட்டுப்பாளையம் நீதிமன்றம்சம்மன் அனுப்பியுள்ளது.
விஜய், அசின் ஆகியோர் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவகாசி. இந்த படத்தில் வக்கீல்களைஅவமதிக்கும் விதத்தில் பல்வேறு காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துபல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
இதற்கிடையில் வழக்கறிஞர் எம்.ரஹ்மத்துல்லா மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய், அசின்,இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கில் முதல் எதிரியாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், 2வது எதிரியாக இயக்குனர் பேரரசு, 3வது எதிரியாக விஜய், 4வதுஎதிரியாக அசின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 14ம் தேதி தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட் பி.ஆர்.ராமகிருஷ்ணன்விசாரித்தார்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்ட விஜய், அசின், பேரரசு, ஏ.எம்.ரத்னம் ஆகியோர் வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications