twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகாசி விவகாரம்: விஜய்க்கு பிடிவாரண்ட் காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் நீதிமன்ற சம்மனைப் பெற்ற பின்பும் நேரில் ஆஜராகாத நடிகர் விஜய், சிவகாசி படத் தயாரிப்பாளர்ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து காட்டுமன்னார்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி படத்தில், வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வைத்ததை எதிர்த்து சிவகாசி படத் தயாரிப்பாளர்ஏ.எம்.ரத்னம், இயக்குநர் பேரரசு, நடிகர் விஜய், நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் மீது பல்வேறு நீதிமன்றங்களில்வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் நாராயணமூர்த்தி, ஜேசுதாஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தவழக்கில் நேரில் ஆஜராகுமாறு கூறி அனைவருக்கும் நீதிபதி கவுதமன் சம்மன் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய்ஊட்டியில் படப்பிடிப்பில் உள்ளார். மேலும் அவர் பிரபலமான நடிகராக இருப்பதால் கோர்ட்டுக்கு வந்தால் பெரும் கூட்டம் கூடிசட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே அவர் கோர்ட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.இதேபோல, ஏ.எம்.ரத்னம் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதற்குமனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கவுதமன், ஏற்கமுடியாத காரணத்தை மனுதாரர்கள் கூறியுள்ளனர். எனவே விஜய் மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பிக்கிறேன் என்றுஉத்தரவிட்டார். சம்மன் வரவில்லை என்று கூறி அசின், பேரரசு, பாஸ்கர் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைதேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

    By Staff
    |

    காட்டுமன்னார்கோவில்:


    காட்டுமன்னார்கோவில் நீதிமன்ற சம்மனைப் பெற்ற பின்பும் நேரில் ஆஜராகாத நடிகர் விஜய், சிவகாசி படத் தயாரிப்பாளர்ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து காட்டுமன்னார்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிவகாசி படத்தில், வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வைத்ததை எதிர்த்து சிவகாசி படத் தயாரிப்பாளர்ஏ.எம்.ரத்னம், இயக்குநர் பேரரசு, நடிகர் விஜய், நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் மீது பல்வேறு நீதிமன்றங்களில்வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

    காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் நாராயணமூர்த்தி, ஜேசுதாஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தவழக்கில் நேரில் ஆஜராகுமாறு கூறி அனைவருக்கும் நீதிபதி கவுதமன் சம்மன் அனுப்பியிருந்தார்.

    இந்த நிலையில், இவ்வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய்ஊட்டியில் படப்பிடிப்பில் உள்ளார். மேலும் அவர் பிரபலமான நடிகராக இருப்பதால் கோர்ட்டுக்கு வந்தால் பெரும் கூட்டம் கூடிசட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே அவர் கோர்ட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

    இதேபோல, ஏ.எம்.ரத்னம் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதற்குமனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கவுதமன், ஏற்கமுடியாத காரணத்தை மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

    எனவே விஜய் மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பிக்கிறேன் என்றுஉத்தரவிட்டார். சம்மன் வரவில்லை என்று கூறி அசின், பேரரசு, பாஸ்கர் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைதேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X