விஜய்க்கு பிடிவாரண்ட்
நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நெய்வேலி நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்த தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. இப்படத்தில்வழக்கறிஞர்கள் மனம் புண்படும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரைசட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் முதலில் வழக்கு தொடர்ந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே கோரிக்கையைவலியுறுத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாயின.
பல நீதிமன்றங்களிலிருந்தும் விஜய், ஆசின், இயக்குனர் பேரரசு ஆகியோருக்குசம்மன்கள் அனுப்பட்டன.
இதே போல் நெய்வேலி வழக்கறிஞர் கலைமணி சார்பில் வக்கீல்கள் ஆனந்தராஜ்,மணவாளன், மூவேந்தன், இளங்கோவன், ராஜ்மோகன் ஆகியோர் நெய்வெலிஜூடிசியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, இயக்குனர் பேரரசு, நடிகர்கள் விஜய், பாஸ்கர்,சிட்டிபாபு, நடிகை ஆசின், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்கு சம்மன்அனுப்ப உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி 18ம் தேதியே சம்மனைப் பெற்றுக்கொண்ட விஜய், பாஸ்கர்,ஏ.எம்.ரத்னம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என எதிர் மனு தாக்கல்செய்தனர். இதைத் தொடர்ந்து மார்ச் 28ம் தேதி அவர்களுக்கு மீண்டும் கோர்ட்டில்ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனாலும் மூவரும் மீண்டும் ஆஜராகததால் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட்பிறப்பித்து நீதிபதி சுதா உத்தரவிட்டார். இயக்குனர் பேரரசு, ஆசின், சிட்டிபாபுஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications