விஜய்க்கு எதிராக பிடிவாரண்ட்
சிவகாசி பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக ஆற்காடு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும்தயாரிப்பாளர் ரத்னம், இயக்குனர் பேரரசு ஆகியோருக்கும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இந்தப் படத்துக்கு எதிராகபோராட்டங்கள் வெடித்தன. வழக்குகளும் தொடரப்பட்டன.
ஆற்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து விஜய் உள்ளிட்ட 4 பேரும்ஜூன் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், விஜய் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்குவாரண்ட் பிறப்பிக்கட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications