இன்னும் 46 நாள் தான் இருக்கு.. தெறிக்க விட தயாராகும் புள்ளிங்கோ #Vijay46GALABeginsin46D
சென்னை: தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 46 நாட்களே இருப்பதாக #Vijay46GALABeginsin46D என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் கலெக்ஷன் மாஸ்டராக உருவாகி இருக்கிறார்.
லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மிஸ்ஸான செலிபிரேஷனை தளபதி புள்ளிங்கோ வரும் ஜூன் 22ம் தேதி தெறிக்க விட தயாராகி வருகின்றனர்.

46 வயது
இளைய தளபதி விஜய்யாக இருந்து தளபதி விஜய்யாக அப்கிரேட் ஆகியுள்ள நடிகர் விஜய்க்கு வரும் ஜூன் 22ம் தேதி 46 வயதாக போகிறது. அதனை கொண்டாடும் விதமாக 46 நாட்களுக்கு முன்பே பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவரது ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர். ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் அந்த ஹாஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது.

மாஸ் போஸ்டர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் போஸ்டர் சமீபத்தில், பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில், அதே மாதிரியான போஸ்டர் டிசைனில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட லுக்கை விஜய் ரசிகர்கள் உருவாக்கி அந்த ஹாஷ்டேக்கில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்
கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட இடங்களிலும் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மாஸ்டர் படம் பான் இந்தியா படமாக வெளியானால், பாலிவுட்டிலும் விஜய்க்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெமி காட்
தனக்கு பிடித்த தலைவனை ரசிகர்கள் கடவுளாக பார்க்கத் தொடங்கி விட்டனர். நடிகர் விஜய்க்கு, சிலை உருவாக்கி அவரது ரசிகர்கள் சமீபத்தில் பூஜை போட்டது எல்லாம் வைரலானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கோலிவுட் ரசிகர்களை பொறுத்தவரையில் டெமி காடாகவே நடிகர் விஜய் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுடன் செல்ஃபி
எந்தவொரு விழாவாக இருந்தாலும், தனது ரசிகர்களுடன் தாராளமாக செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவர்களை உற்சாகப் படுத்துவதில் விஜய்க்கு நிகர் விஜய் மட்டுமே. த்ரோபேக் செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு விஜய் ரசிகர்கள், பிறந்த நாள் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்து விட்டனர்.

அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே
நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 46 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே ட்வீட்களை தெறிக்கவிட்டு ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். நடிகர் விஜய்யின் அரிய புகைப்படங்கள், அவர் நடித்த படங்கள் குறித்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜகதீஷின் அடுத்த மிஷின்
வரும் ஜூன் 22ம் தேதி தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகவுள்ள துப்பாக்கி 2 படம் குறித்த அப்டேட் அன்றைய தினம் வெளியானால், ரசிகர்கள் செய்யப் போகும் சாதனைகள் வேற லெவல் வெறித்தனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











