»   »  விஜய், அசின் மீது வழக்கு! சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன?2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங்கித் தருகிறார்.3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்க்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.இப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.இக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.

விஜய், அசின் மீது வழக்கு! சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன?2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங்கித் தருகிறார்.3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்க்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.இப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.இக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதாகக் கூறி அந்தக்காட்சிகளில் நடித்துள்ள நடிகர் விஜய், நடிகை அசின் மற்றும் சிவகாசி படத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்மீது மதுரை சட்டக் கல்லூரி மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான படம் சிவகாசி. விஜய், அசின் ஜோடியாக நடிக்க, ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், பேரரசுஇயக்கியுள்ளார். இப்படத்தில் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாக கூறி மதுரைசட்டக் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வரும் மாணவர் பிரவீன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜனகர் தாக்கல் செய்துள்ள மனு:

சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


1. இப்படத்தில் ஒரு காட்சியில் கூட நீதிமன்றத்தைக் காட்டவில்லை. ஆனால் வழக்கறிஞர் உடையுடன் ஒருவர்படம் முழுக்க வருகிறார். அதற்கான அவசியம் என்ன?

2. படத்தின் முதல் காட்சியில், வக்கீல் உடையுடன் சிரிப்பு நடிகர் ஒருவர், கதாநாயகனுக்கும், ஒரு சிறுவனுக்கும் டீவாங்கித் தருகிறார்.

3. வக்கீலாக வருபவரைப் பார்த்து கதாநாயகன், உனக்கு ஒரு பெரிய கேஸ் வந்திருக்கு என்கிறார். ஆனால்கதாநாயகனுக்குப் பின்னால் கேஸ் சிலிண்டருடன் ஒருவர் நிற்கிறார்.

4. இன்னொரு காட்சியில் வக்கீலாக வரும் நபர் பிளாட்பாரத்தில், வழக்கறிஞர்கள் அணியும் உடையுடன், தலைக்குசட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார். அவருக்கு அருகே இவ்விடம் பிக் பாக்கெட், சில்மிஷம்,செயின் பறிப்பு போன்றவற்றுக்கு குறைந்த விலையில் கேஸ்கள் பார்க்கப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.

5. கதாநாயகன், அடிக்கடி, கூப்பிடு அந்த பிளாட்பார வக்கீலை என்று கூப்பிடுகிறார். இன்னொரு காட்சியிலோகூமுட்டை வக்கீல் என்று அதட்டுகிறார்.


இப்படி வழக்கறிஞர் தொழிலை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பியுள்ளன.நீதித்துறையில் நாளை பங்கு கொள்ளப் போகும், என்னைப் போன்ற சட்டம் படிக்கும் மாணவர்களின் மனஉறுதியையும், தன்னம்பிக்கையையும் குலைக்கும் விதமாக இந்தக் காட்சிகள் உள்ளன.

இக்காட்சிகளால் மனுதாரரின் நண்பர்கள், உறவினர்களிடையே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவேஇந்தக் காட்சிகளை வைத்த, அதில் நடித்த, இப்படத்தை இயக்கி, தயாரித்த அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு மதுரை 2வது கூடுதல் குற்றத்துறை நீதிபதி சீதாராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணை வருகிற 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர் மனுதாரர்களாக விஜய், அசின், ஏ.எம்.ரத்னம், பேரரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அ...ஆ... படத்தில் வக்கீல்களை அள்ளக்கை என்று சொல்லி வசனம் வைத்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீது வழக்கறிஞர்கள் வழக்குப் போட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வசனத்தை நீக்கினார் சூர்யா. தற்போதுசிவகாசி படத்திற்கும் அதே பிரச்சினை எழுந்துள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil