எலந்த பயம்.. எலந்து பயம்.. மறக்க முடியுமா? விஜயநிர்மலாவின் அந்த ஆட்டத்தையும் முகபாவனைகளையும்!

சென்னை: பழம்பெரும் நடிகையும் கின்னஸ் சாதனை இயக்கநருமான விஜய நிர்மலா இன்று காலமானார். அவருக்கு வயது 75. எலந்த பயம் பாடலில் அவர் ஆட்டத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200 தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. அவர் 44 தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார்.

விஜய நிர்மலா 'மச்ச ரேகை' எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

 எலந்த பயம் பாடல்

எலந்த பயம் பாடல்

1968ஆம் ஆண்டு வெளியான பணமா பாசமா படத்தில் நடித்துள்ள இவர், எலந்த பயம்.. எலந்த பயம்.. என்ற பாட்டுக்கு போடும் ஆட்டம் இன்றும் பிரபலம். அந்த பாடலில் வரிகளுக்கு ஏற்ப விஜய நிர்மலா காட்டும் முக பாவனைகள்... ப்பா.. செம.. வேற லெவல்..

 பாவடை தாவணியில் ஆட்டம்

பாவடை தாவணியில் ஆட்டம்

இன்றும் அந்த பாடலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. பாவடை தாவணியில் குனிந்து நிமிர்ந்து விஜய நிர்மலா ஆடும் ஆட்டம்.. வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒவ்வொருவரும் அதனை கண்டு உணர்ந்தால் மட்டுமே புரியும்.

 அலைந்த கண்கள் மீளா உறக்கம்

அலைந்த கண்கள் மீளா உறக்கம்

அப்படி ஆடிய கால்களும் அலைந்த கண்களும் இன்று மீளா ஓய்வு கொண்டு உறங்குகின்றன. இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார் விஜய நிர்மலா.

 நாளை இறுதிச்சடங்கு

நாளை இறுதிச்சடங்கு

அவரது இறுதிச்சடங்கு ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் நாளை நடைபெறுகிறது. விஜய நிர்மலா மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 விஜய பாபுவின் சித்தி

விஜய பாபுவின் சித்தி

விஜய நிர்மலாவின் கணவர் நடிகர் கிருஷ்ணா ஆவார். அவருக்கு நரேஷ் என்கின்ற மகனும் உள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விஜய நிர்மலாவின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X