புறப்பட்டார் புரட்சிக் கலைஞர்.. விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கைகூப்பி கலங்கி செல்லும் விஜய பிரபாகரன்

சென்னை: அப்படியே விஜயகாந்தை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கும் அவரது மகன் விஜய பிரபாகரன் அப்பா இறுதி ஊர்வலத்தில் மக்களை பார்த்து கைகூப்பியபடியே அழுதுக் கொண்டே செல்லும் காட்சிகள் அனைத்து இதயங்களையும் உலுக்கி எடுக்கின்றன.

சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு விஜயகாந்தின் திருவுடல் ஊர்வலமாக தீவுத் திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது.

Vijaya Prabhakaran crying fully at Vijayakanth funeral march

வழிநெடுக மக்கள் வெள்ளம் பெருங்கடலாக திரண்டு நின்று 9வது வள்ளலான புரட்சிக் கலைஞர் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். கையெடுத்துக் கும்பிட்டு விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க பொதுமக்கள், வயதானவர்கள், பிஞ்சு குழந்தைகள் அஞ்சலி செலுத்தி வருவதை பார்த்த விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் இரு கைகளையும் மக்களை பார்த்து கூப்பி அப்பாவின் பிரிவால் அழுது கொண்டே ஊர்வலமாக செல்லும் காட்சிகள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன.

அமரர் ஊர்தி வாகனத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா, விஜயகாந்தின் மகன்களான விஜய பிராபகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் உள்ளிட்டோர் கண்கலங்கியபடியே செல்கின்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த் கட்டிய ஆண்டாள் அழகர் மண்டபமாக இருந்து பின்னர் தேமுதிக அலுவலகமாக மாறிய அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்திலேயே ஓய்வெடுக்க சென்றுக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க வழி நெடுகிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X