கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு.. ஆனால், விஜய பிரபாகரன் பேட்டி!
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சற்று பின்னடைவு தான் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்துக்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடம் எப்போதுமே உண்டு. அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் விஜயகாந்த்.
சட்ட சபையில் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடித்துக் கொண்டு பேசக்கூடிய துணிச்சல் கேப்டன் விஜயகாந்துக்கு மட்டுமே இருந்தது.

கேப்டன் விஜயகாந்த்: கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் தீவிர அரசியலில் செயல்பட முடியவில்லை. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களாலும் தொண்டைக் குழாய் தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய பிரபாகரன்: இந்நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய பூர்வீக கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகத்திற்காக இன்று வந்திருக்கிறேன். இதை முடித்துவிட்டு அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருக்கிறேன் என்றார்.
சற்று பின்னடைவு: அப்போது செய்தியாளர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜய பிரபாகரன், கேப்டன் உடல்நலம் சற்று பின்னடைவுதான் ஆனால் கேப்டன் நன்றாக உள்ளார், அவர் நூறு வயசு வரை நன்றாக இருப்பார். ஆனால் பழையபடி பேசுவாரா? நடப்பாரா என்றால் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.

உங்களைப் போலவே நாங்களும் அவர் குணமடைவார் என்று நம்புகிறோம். ஆனால், இப்போது அவர் நன்றாக இருக்கிறார் என்றார். விஜய பிரபாகரனே சற்று பின்னடைவு தான் என கூறியுள்ளதால், அவரது ரசிகர்களும், தேமுதிக கட்சித் தொண்டர்களும் கவலையில் உள்ளனர்.
தாரக மந்திரம்: கேப்டனின் தாரக மந்திரமே முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம் என்று சொல்வார் அதன் அடிப்படையில்தான் கட்சியை நடத்தி வருகிறோம். எங்கள் அம்மா ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே கேப்டனுக்கு துணையாக இருந்துள்ளார். என் கனவை கூட ஒதுக்கி வைத்து தொண்டர்கள் அழைத்ததற்காக நான் வந்துள்ளேன்.


Click it and Unblock the Notifications











