கேப்டன் மகன் விஜய பிரபாகரன்.. அந்த பெருமை போதும்.. அழாத நாளே இல்லை.. விஜயகாந்த் மகன் கண்ணீர்!

சென்னை: நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. இத்திரைப்படம் 4K தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜயபிரபாகரன் தனது தந்தையை நினைத்து கண்கலங்கி பேசினார்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் எவர்கின் திரைப்படமாகவே உள்ளது. கேப்டன், ராவுத்தர் வாபாவும், ஆர்கே செல்வமணியும் இப்படி ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருந்தார்கள். கேப்டன் திரைப்படம் அப்பாவின் நூறாவது திரைப்படம். ஆனால், அப்பா இறந்த பிறகு ரீ ரிலீஸாகும் முதல் திரைப்படமாக நாம் அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும். அப்பா இதுவரை 156 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதே போல அவர் நடித்த திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி இன்றைய இளம் தலைமுறையினருக்கும், பிலிம் இன்ஸ்டூட் மாணவர்களுக்கும் இந்த படம் ஒரு பாடமாக இருக்கும்.

Vijayakanth Captain Vijaya Prabhakaran

விஜயபிரபாகரன்: எனக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்ததற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படம் தான். கேப்டன் பிரபாகரன் படம் எடுக்கும் போது தான், நான் பிறந்தேன். அதேபோல விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன் நினைவாக அப்பா எனக்கு இந்த பெயரை வைத்ததாக பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார். இந்த பெயரை வைத்ததற்கான அர்த்தம் எப்போது உனக்கு புரியாது, ஆனால், நான் இல்லாத போதும் இந்த பெயர் உன்னை உயர்த்தும் என்று அப்பா ஏற்கனவே எனக்கு சொல்லி இருக்கிறார். அதற்கான காரணம் என்ன எனக்கு இப்போதுதான் புரிகிறது.

கண்ணீர் பேச்சு: தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், எனக்கு எம்பி பதவி எல்லாம் முக்கியமே இல்லை. கடைசி வரை நான் விஜயகாந்த் மகன் என்கின்ற பெருமை மட்டுமே எனக்கு போதும். மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழகக்கூடாது என்று கட்டுப்பாட்டுடன் இருந்தேன். ஆனால், உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். இந்த உலகத்தில் நான் இருக்கும் கடைசி நிமிஷம் வரைக்கும் என்னுடைய அப்பாவை நான் நினைத்துக் கொண்டே தான் இருப்பேன். தினமும் அவரை நினைத்து நான் அழுது கொண்டே தான் இருக்கிறேன். அவரை நினைத்து அழுவதில் நான் பெருமையாக தான் நினைக்கிறேன். தோல்வியால், சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விட்டதை நினைத்து நான் அழவில்லை. எங்க அப்பாவை நினைத்து தான் அழுகிறேன். அப்பாவை நான் மிகவும் மிஸ் பண்றேன், அப்பாவின் வாழ்த்து இந்த படத்திற்கு நிச்சயம் இருக்கும் என உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

கேப்டன் பிரபாகரன்: ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சரத்குமார் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும், ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடலாக உள்ளன. குறிப்பாக ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடிய ஆட்டத்தை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரைப்படம் வரும் 22ஆம் தேதி புதிய தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X