கோட் படத்தின் கேப்டன் வரும் சீன் புல்லரிக்கிறது.. மக்கள் கொண்டாடுகிறார்கள்.. விஜய பிரபாகரன்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள 'கோட்' படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகளை கொண்டாடி வரும் நிலையில், கோட் படம் குறித்து விஜயகாந்தின் மகன் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விஜயபிரபாகரனிடம், விஜய் அரசியலுக்கு வருவது குறித்தும், தேர்தலில் அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜய் பிரபாகரன், விஜய் அண்ணா ஒரு மிகப்பெரிய நடிகராக இருக்கிறார், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அவர், அரசியலுக்கு வந்து, கட்சியின் கொள்கைகள், மக்களுக்கு அவர் என்ன செய்யப்போகிறார், மக்களிடம் அவருக்கு எப்படி ஆதரவு இருக்கிறது என்பதை பார்த்துத்தான் எதையும் சொல்ல முடியும் என்றார்.

goat vijay vijaya prabhakaran

பின் முடிவு செய்யலாம்: ஆனால், தேசிய முற்போக்கு திராவிட கழகம் 30 ஆண்டுகள் பழமையான கட்சி என்பதை மறந்துவிடக்கூடாது. முதலில் மாநாடு நடத்தட்டும், கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன் பிறகு ஆவர் தனித்து போட்டியிடுகிறாரா, திமுகவிற்கு செல்கிறாரா, அதிமுகவிற்கு போகிறாரா, சீமானுடன் சேர்கிறாரா என்று பார்க்கலாம். இதன்பிறகு இதுகுறித்து பேசலாம் என்றார்.

புல்லரிக்கிறது: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் கோட் படத்தை பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், நான் இன்னும் கோட் படத்தை பார்க்கவில்லை, ஆனால், அப்பா வரும் காட்சிகளை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பலவற்றில் அனுப்புகிறார்கள், அதை பார்க்கும் போது புல்லரித்தது. படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. ஆனால், அதற்கான நேரம் சரியாக அமையவில்லை. நிச்சயமாக நாளை அல்லது நாளை மறுநாள் கோட் படத்தை பார்ப்பேன் என்று விஜயபிரபாகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

லீக்கான காட்சி: கோட் படத்தில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக திரையில் கொண்டு வந்துள்ளனர். அந்த வகையில், கோட் சூட்டில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து மிரட்டியுள்ளார் கேப்டன். அத்துடன் ஏஐ தொழில்நுட்பத்திலும் அவரை சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். இது சம்பந்தமான காட்சிகளை, போட்டோக்களை இணையத்தில் லீக்காசி டிரெண்டாகி வருகிறது. ஏற்கனவே வெளியான தகவலின்படி, படத்தின் ஓபனிங் சீனிலே கேப்டன் விஜயகாந்த் திரையில் தோன்றுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X