»   »  விஜய்யின் புதுப்படம்... அஃபிஷியலாக அறிவித்தது விஜயா புரொடக்ஷன்ஸ்!

விஜய்யின் புதுப்படம்... அஃபிஷியலாக அறிவித்தது விஜயா புரொடக்ஷன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 60 வது படம் குறித்து கடந்த ஒரு மாதமாக தினசரி செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிகாரப்பூர்வமாக இன்று படத்தை அறிவித்துள்ளது பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ்.

மறைந்த ஜாம்பவான் நாகிரெட்டியால் நிறுவப்பட்ட விஜயா புரொடக்ஷன்ஸ் எங்கள் வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உள்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது.

Vijaya Productions officially announces Vijay movie

அடுத்து விஜய்யை வைத்து புதிய படம் தயாரிக்கிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்துக்கு இப்போதைக்கு விஜய் 60 என தலைப்பிட்டுள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இதே நிறுவனம் தயாரித்த வீரம் படத்துக்கும் இவர்தான் வசனம் எழுதினார்.

பி நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன் பி வெங்கட்ராம் ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது.

English summary
Vijaya Productions officially announced their new movie in which Vijay plays the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil