அமெரிக்க தியேட்டரில் அக்வாமேன் படம் பார்த்த விஜயகாந்த்: அந்த சிரிப்பை பாருங்கய்யா!
நியூயார்க்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் அக்வாமேன் படம் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அக்வாமேன் ஆங்கிலப் படத்தை பார்த்து ரசித்துள்ளார் விஜயகாந்த்.
விஜயகாந்த் தனது மனைவியுடன் சேர்ந்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளார்.
புகைப்படம்
அக்வாமேன் படம் பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை விஜயகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கால் மீது கால் போட்டு சந்தோஷமாக சிரித்தபடி உள்ளார்.

மகிழ்ச்சி
விஜயகாந்த் இப்படி சந்தோஷமாக சிரிப்பதை பார்த்து அவரின் ரசிகர்களும், தேமுதிகவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நல்ல மனுஷன், எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தியுள்ளனர்.
நலம்
விஜயகாந்த் உடல்நலம் தேறி நலமுடன் நாடு திரும்ப வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அரசியல்
விஜயகாந்த் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











