ரஜினி, கமல் போல இந்திக்கு போகல.. தமிழில் மட்டுமே நடித்த விஜயகாந்த்.. கடைசி படம் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: மூன்று சங்கம் வளர்த்த மாமதுரையில் பிறந்த விஜயகாந்த் தமிழ் மீது எப்போதுமே மாறாப்பற்றுக் கொண்டு விளங்கினார். 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களாக பிரபலமான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் மற்ற மொழிப் படங்களிலும் இந்தி திரையுலகிலும் சில படங்களில் நடித்து வந்தனர். ஆனால், கடைசி வரை தமிழ் படத்தில் மட்டுமே நடித்தவர் விஜயகாந்த்.

கடைசியாக அவர் நடிப்பில் உருவாகி பாதியிலேயே நின்று போன படத்தின் பெயரும் தமிழின் பெருமையை சொல்லும் படமாகவே இருந்தது. ஆனால், அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.

Vijayakanth acted only in Tamil Cinema and his last dropped movie titled Tamizhan Endru Sol

தமிழ் சினிமாவின் கேப்டன்: நடிகர் சங்கத்தின் தலைவராக மாறிய விஜயகாந்த் தமிழ் சினிமாவின் கேப்டனாகவே சிறப்பாக செயல்பட்டார். பல்வேறு நட்சத்திரங்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர் நடத்திய கலை நிகழ்ச்சிகள் எல்லாம் இன்றளவும் மற்ற நடிகர் சங்க தலைவர்களால் சாத்தியமாகாத ஒன்றாகவே உள்ளது.

மற்ற மொழிகளில் நடிக்கவில்லை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடித்து வந்தனர். ஆனால், கடைசி வரை மற்ற இடமெல்லாம் எதுக்கு நமக்கு தேவையில்லாத விஷயம். நம்ம ரசிகர்களுக்கான நம்ம மக்களுக்கான படங்களை கொடுப்போம் என நடித்தார். அவரது படங்களில் இந்தி நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைத்து மாஸ் காட்டினார்.

மோகன்லால் முதல் சோனு சூட் வரை இரங்கல்: தமிழ் சினிமாவிலேயே பல முன்னணி நடிகர்கள் இரங்கல் தெரிவிக்க கூட தயக்கம் காட்டி வரும் நிலையில், நடிகர் விஜயகாந்துக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட், மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கல்லழகர் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் சோனு சூட் பகிர்ந்துள்ளார்.

தமிழன் என்று சொல்: கடைசியாக தமிழில் விஜயகாந்த் நடித்த படத்தின் டைட்டிலே "தமிழன் என்று சொல்" தான். அந்த படத்தின் மேக்கிங் காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதில், விஜயகாந்த், "ஜெயிச்சவனோட நாடு பார்க்கப்படும்.. ஜெயிச்சவனோட மொழி பேசப்படும்" என கெத்தாக வசனம் பேசும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இப்படி கம்பீரமாக இருந்த கஜேந்திரா காலமாகி விட்டாரே என அழுது புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X