Vijayakanth Ajith: விஜய்யை தொடர்ந்து அஜித்... விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரும் ஏகே..?

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தளபதி விஜய் இரவோடு இரவாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்காக செந்தூரபாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தவர் விஜயகாந்த். அதேபோல், சூர்யாவுக்காக பெரியண்ணா படத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். விஜயகாந்த் - அஜித் காம்போ மட்டும் இதுவரை இணைந்தது கிடையாது.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரும் அஜித்?: தமிழில் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் நிகரான ரசிகர்கள் பட்டாளத்துடன செம்ம கெத்து காட்டியவர். அதேபோல், விஜயகாந்தின் பல படங்கள் சில்வர் ஜுப்ளி கொண்டாடியதும் உண்டு. அதிகமான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு, சண்டைக் காட்சிகளில் ட்ரெண்ட் செட்டராக இருந்தார்.

 Vijayakanth: Ajith Expected To Pay His Last Respect To Captain Vijayakanth

கால்களை சுழட்டி அடிக்கும் விஜயகாந்தின் ஃபைட் சீன்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த், சிகிச்சை பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் முதலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

ஆனால், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துகொண்டே இருப்பதால், அவரது உடல் தீவுத் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களும் பிரபலங்களும் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேற்று இரவு அஞ்சலி செலுத்தினார். விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்காக செந்தூரபாண்டி படத்தில் நடித்தவர் விஜயகாந்த்.

 Vijayakanth: Ajith Expected To Pay His Last Respect To Captain Vijayakanth

இந்நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ள அஜித், ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு அவசரமாக சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்தை போல அஜித்தும் பல தடைகள், அவமானங்களை கடந்து சினிமாவில் சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படப்பிடிப்புக்காக நாகர்கோவில் சென்றிருந்த ரஜினி, விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்ததும் அவசரமாக சென்னை திரும்பினார். இன்று அவரும் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில், அஜித்தும் அஞ்சலி செலுத்த வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X