கமலையே நடிப்பில் மிரள வைத்த விஜயகாந்த்.. 2 பேரும் ஒண்ணா நடிச்ச ஒரே படம் எது தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், கமல்ஹாசனும் விஜயகாந்தும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான். 1986ம் ஆண்டு வெளியான மணக்கணக்கு படத்தில் தான் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தின் காட்சி இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததுமே முதல் நபராக சமூக வலைதளத்தில் நேற்று காலையிலேயே கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். ஆனால், இன்னமும் நேரில் வந்து அவர் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Vijayakanth and Kamal Haasan starrer movie Manakanakku scene goes trending

கமல்ஹாசன் இரங்கல்: "எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

Vijayakanth and Kamal Haasan starrer movie Manakanakku scene goes trending

அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்தார்.

மணக்கணக்கு சீன்: 1986ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆர்.சி. சக்தி மற்றும் ரங்கராஜன் என இரு இயக்குநர்கள் இணைந்து இயக்கிய படம் அது. அந்த படத்தில் தான் கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்தனர்.விஜயகாந்த், ராதா உள்ளிட்ட பலர் நடித்த அந்த படத்தில் கமல்ஹாசன் சினிமா இயக்குநர் போல கேமியோ ரோலில் நடித்து கலக்கி இருப்பார். அந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கமலுக்கு முன்னாடியே ஸ்கோர் செய்த விஜயகாந்த்: அந்த படத்தில் கேமியோ ரோலில் கமல் நடித்த நிலையில், அவருக்கு முன்பாகவே விஜயகாந்த் ஸ்கோர் செய்த காட்சிகளை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கமல் வருவாரா?: இன்று மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடிகரும் மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்த வருவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு கமல் வருவார். இந்நிலையில், விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வருவாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்டிப்பாக தனது அன்பு சகோதரரை நேரில் சந்திக்க கமல் வருவார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X