Vijayakanth: "Wow!! நம்ம கேப்டனா இது?” கூலர்ஸ்... ரொமான்ஸ் லுக்... கெத்து காட்டும் விஜயகாந்த்!

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.

1980, 90களில் கோலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோவாக மாஸ் காட்டி வந்தார்.

கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாததால் சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில், விஜயகாந்த் ஸ்டைலிஷாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.

 Vijayakanth: Captain Vijayakanths latest photo is trending

விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்: ரசிகர்களால் கேப்டன் என செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி வந்தார். மதுரையில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தவர், பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் வேற லெவலுக்கு வளர்ச்சிப் பெற்றார்.

புரட்சிகரமான வசனங்கள், கால்களால் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். மாநகர காவல், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ரமணா என விஜயகாந்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே பல படங்கள் வெற்றி விழா கொண்டாடின. சினிமாவைப் போல ரியல் லைஃபிலும் ஹீரோவாகவே வலம் வந்தார் கேப்டன்.

தன்னைத் தேடி யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்து அழகுப் பார்த்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தான் சாப்பிடுவது தான் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என ஆர்டர் போட்டவர். ஏராளமான உதவிகள் என எப்போதுமே கேப்டனின் கைகளும் எண்ணங்களும் மற்றவர்களை அரவணைத்து சென்றன. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், ஆரம்ப காலத்தில் அங்கேயும் தனக்கான தனி முத்திரை பதித்தார்.

 Vijayakanth: Captain Vijayakanths latest photo is trending

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலில் தலை காட்டாமல் ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் இப்போதும் திரையுலகில் கேப்டன் விஜயகாந்தின் வைப் இருக்கிறது. சினிமா உட்பட எவ்விதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருக்கும் விஜயகாந்தை எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில், விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கூலர்ஸ் அணிந்துள்ள விஜயகாந்த், நாடியில் கை வைத்து ரொமாண்டிக் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். இன்னொரு போட்டோவில் சாலையோரம் தனது காரின் முன்பு நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன. அதேநேரம், இது லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட போட்டோவா இல்லை அதற்கு முன்பு எடுத்ததா எனத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X