கடைசியா ஒரு முறை கேப்டனை பார்க்கணும்.. தீவுத்திடல் பக்கம் கடல் வெள்ளம் போல மக்கள் கூட்டம்!

சென்னை: இன்னும் சற்று நேரத்தில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தீவுத்திடல் முழுவதும் மக்கள் கடல் அலை போல திரண்டு கடைசியாக ஒரு முறை கேப்டன் விஜயகாந்தை பார்த்து விட மாட்டோமா என வழிநெடுக காத்திருக்கின்றனர். எம்ஜிஆர், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கூடியதை போல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகளவில் கூடி உள்ளனர்.

நடிகராக இருந்து தேமுதிக எனும் கட்சியை உருவாக்கி கருணாதியின் திமுகவை வீழ்த்தி எதிர்க்கட்சி தலைவராக மாறியவர் விஜயகாந்த். உடல்நலக்குறைவு ஏற்பட்டு சில ஆண்டுகளாக அதிகம் பேச முடியாமல் மிகவும் கடினமான சூழலில் உயிரை பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த விஜயகாந்த் இன்று நிம்மதியாக ஓய்வெடுத்து வருகிறார் என்றே மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Vijayakanth Funeral: Peoples turns like flood in Chennai roads

ரஜினி முதல் விஜய் வரை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மற்ற கட்சி அரசியல் தலைவர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அர்ஜுன், இளையராஜா, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர். சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால் உள்ளிட்ட பலர் சோஷியல் மீடியா மூலம் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

பெருங்கூட்டம்: சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்த நிலையிலும் இப்படியொரு கூட்டம் கூடவில்லை. கடைசியாக ஜெயலலிதாவுக்கு பெருங்கூட்டம் கூடியது. அதன் பின்னர் தற்போது விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தான் மக்கள் பல மாவட்டங்களில் இருந்து பெருந்திரளாக கூட்டம் கூட்டமாக தீவுத்திடலில் கூடி வருகின்றனர். மேலும், தீவுத்திடல் முதல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை ரசிகர்களும் தொண்டர்களும் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.

இறுதி ஊர்வலம்: இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. விஜயகாந்த் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என லட்சக் கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர். விஜயகாந்த் நல்ல தலைவர் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X