கணவர் கொடுத்த முதல் கிப்ட்.. பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா.. கலங்கும் ரசிகர்கள்!

சென்னை: தனது கணவர் விஜயகாந்த் வாங்கி கொடுத்த முதல் கிப்ட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சாரம் செய்வது என அனைத்துப் பணிகளையும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது சகோதர் சுதீஷ் மட்டுமே கவனித்து வந்தனர்.

vijayakanth gifts gold chain to premalatha birthday throwback story

இதையடுத்து விஜயகாந்த் இருமல் மற்றும் சளி காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை செய்தி வெளியிட்டது. இதையடுத்து, விஜயகாந்த் உயிரிழந்துவிட்டதாக செய்தி பரவியது. இதன்பின் பிரேமலதா அது வதந்தி, கேப்டன் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இதன் பின் வீடு திரும்பிய விஜயகாந்த், டிசம்பர் 14ந் தேதி நடைபெற்ற தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: இதையடுத்து கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நுரையீரல் அழற்சி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 28ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு சில சடங்குகள் செய்யப்பட்டன. பின் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு பிறகு தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் விஜயகாந்த்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த்தின் உடல் வாகனத்தில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலமாக தீவுத்திடலில் இருந்து கோயம்பேடுக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

vijayakanth gifts gold chain to premalatha birthday throwback story

பிரேமலதா பேட்டி: விஜயகாந்த் மறைந்து மூன்று நாட்கள் ஆன போதும் அவரை மக்கள் மறக்காமல் நினைவு கூர்ந்து அவரின் பழைய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரேமலதா தனது கணவர் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கலா மாஸ்டர் உங்கள் கணவர் கொடுத்த முதல் கிப்ட் என்ன என்று கேட்க, அதற்கு பிரேமலதா அவருக்கு கிப்ட் கொடுக்கவே தெரியாது. எனக்கு ஜனவரி 31ந் தேதி திருமணமானது. திருமணமான ஒன்றரை மாதத்தில் அதாவது மார்ச்சில் எனது பிறந்த நாள் வந்தது. அப்போது கூட மனைவிக்கு வாழ்த்து சொல்லனும், கிப்ட் கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை.

அவர் கொடுத்த முதல் பரிசு: அப்போது, அவருடன் உடன் இருந்த நண்பர்கள் அண்ணிக்கு இன்று பிறந்த நாள் ஏதாவது கிப்ட் வாங்கிக்கொடுங்கள் என்று சொன்ன பிறகுதான் அவர் V என்ற எழுத்துப்போட்ட செயினை எனக்கு பரிசாக கொடுத்தார். அது தான் அவர் எனக்கு கொடுத்த முதல் பரிசு, என்னிடம் எத்தனை நகைகள் இருந்தாலும் அந்த பரிசை நான் இப்போதும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் என்றார். இந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறமுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X