twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ளந்தி மனிதர் விஜயகாந்த்..சினிமாவில் பலருக்கும் ஏணி..மதுரையின் மைந்தன் மக்கள் மைந்தன் ஆன கதை

    |

    சென்னை: சினிமாவில் நடிகர் விஜய் முதல் சரத்குமார் வரை பலருக்கும் ஏணியாக இருந்தவர் விஜயகாந்த். அவரது 70 வது பிறந்த நாள் இன்று.

    Recommended Video

    Captain Vijakanth is BACK | மீண்டும் நடிக்கும் Vijaykanth, Vijayantony, Vijay Milton

    தைரியமான ஆளு, வெள்ளந்தியான மனிதர், சமூக அக்கறை மிக்க நடிகர் என விஜயகாந்துக்கு பல பரிமாணங்கள் உண்டு.
    தமிழன் என பேசியவர்கள் மத்தியில் தமிழ் உணர்வோடு இருந்தவர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு பின் தமிழக தாய்மார்களால் அதிகம் நேசிக்கப்பட்டவர் விஜயகாந்த்.

    நாளை விஜயகாந்த் பிறந்தநாள்.. தொடண்டர்கள் நேரில் சந்திக்க வரலாம்.. பிரேமலதா அறிவிப்பு! நாளை விஜயகாந்த் பிறந்தநாள்.. தொடண்டர்கள் நேரில் சந்திக்க வரலாம்.. பிரேமலதா அறிவிப்பு!

    விஜயராஜ் எனும் இளைஞன் விஜயகாந்த் ஆன கதை

    விஜயராஜ் எனும் இளைஞன் விஜயகாந்த் ஆன கதை

    மதுரை மண்ணில் இருந்து நடிகர் ரஜினிகாந்த சாயலுடன் ஆனால் கம்பீரமான கருத்த முரட்டு உருவத்துடன் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் அந்த நடிகர். விஜயராஜ் என்கிற பெயரை விஜயகாந்த் என மாற்றினார் இயக்குநர் காஜா. இனிக்கும் இளமை என்கிற அந்தப்படத்தில் முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோவானார் விஜயகாந்த். அதன் பின்னர் தூரத்து இடிமுழக்கம் படம் அவரை திரும்பிப்பார்க்க வைத்தது.

    80 களின் ஆரம்பம் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தலையெடுத்த காலம்

    80 களின் ஆரம்பம் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தலையெடுத்த காலம்

    1970 ஆம் ஆண்டு இறுதி ஆண்டுகள் 80 களின் ஆரம்பம் தமிழ் திரையுலகின் முக்கியமான ஆண்டுகள் எனலாம். காரணம் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த ரஜினி, கமல், விஜயகாந்த் வரவு இந்த ஆண்டுகளில் தான் நிகழ்ந்தது. அடுத்த 40 ஆண்டுகள் இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டார்கள் ஆள்கிறார்கள் எனலாம். விஜயகாந்த் ரஜினி, கமல் இடையே தனித்துவமாக ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தது தனிக்கதை.

    எஸ்.ஏ.சி விஜயகாந்த் வெற்றி கூட்டணி

    எஸ்.ஏ.சி விஜயகாந்த் வெற்றி கூட்டணி

    மதுரை மண்ணின் மைந்தன், மக்களுக்கு, திரைக்கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர், தமிழக பாரம்பரியத்தில் ஒன்றிபோனவர் என்கிற பெயர் விஜயகாந்துக்கு ஆரம்பம் முதல் இருந்தது. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகில் கால் பதித்தவர் அடுத்த ஐந்தாண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்தார். அவரது வளர்ச்சியில் முக்கிய பங்கு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கு உண்டு. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்கருவுடன் வந்த எஸ்.ஏ.சியும் விஜய்யும் இணைந்தனர். சட்டம் ஒரு இருட்டறை படம் 1981 ஆம் ஆண்டு வெளியானது. முரட்டுத்தனாமான ஆனால் புத்திசாலி கதாநாயகன் சட்டத்தை ஏமாற்றி எப்படி பழி வாங்குகிறான் என்பதே கதை. பெருவெற்றிப்பெற்ற இப்படம் விஜயகாந்தை தமிழக மக்கள் முன் முன்னணி கதாநாயகனாக்கியது.

    பி,சி சென்டர்களின் நாயகன்

    பி,சி சென்டர்களின் நாயகன்

    அதன் பின்னர் எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்தார். பெரும்பாலும் அவைகள் வெற்றிப்படங்களே. விஜயகாந்தை மக்கள் தங்கள் வீட்டுப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள காரணம் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர், ஆரம்பகால படங்கள் எல்லாம் சமூக அக்கறையுடன் வெளிவந்த படங்கள் தன்னை அப்போதிருந்த அரசியல் இயக்கத்துடன் மக்கள் பக்கம் நிற்கும் கலைஞராக அடையாளப்படுத்திக்கொண்டார். சிவப்பு மல்லி, தீர்ப்பு என் கையில், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், சிவந்த கண்கள், சட்டம் சிரிக்கிறது, ஆட்டோ ராஜா, என வரிசையாக பி, சி சென்டர்களில் கால் பதித்தார் விஜய்காந்த.

    பிரபல நடிகருக்கு வில்லன் வேடம் மறுத்த விஜயகாந்த்

    பிரபல நடிகருக்கு வில்லன் வேடம் மறுத்த விஜயகாந்த்

    ஆனாலும் அவரது சில படங்கள் ஓடாததால் அவரை பிரபல நடிகர் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள். மறுத்துவிட்டு மீண்டும் எஸ்.ஏ.சியுடன் இணைந்து சாட்சி என்கிற படத்தை கொடுத்தார். அப்படம் நன்றாக ஓடியது மீண்டும் செகண்ட் இன்னிங்க்சை தொடங்கிய விஜயகாந்த் அதன் பின்னர் தோல்வியையே சந்திக்கவில்லை. 1984 ஆம் ஆண்டு விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் 17 படங்கள் வெளிவந்தன. அதில் வைதேகி காத்திருந்தால் முற்றிலும் புதிய விஜயகாந்தை அடையாளம் காட்டியது. அதற்கு முன் விசுவின் டௌரி கல்யாணம் படத்திலும் வித்தியாசமான வேடம் விஜயகாந்தால் எப்படியும் நடிக்க முடியும் என காட்டியிருந்தது.

    ஊமைவிழிகள் விஜயகாந்தின் ஆளுமையை சொன்ன படம்

    ஊமைவிழிகள் விஜயகாந்தின் ஆளுமையை சொன்ன படம்

    வைதேகி காத்திருந்தால் விஜய்காந்த்தின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் 1986 களில் வெளியான அம்மன் கோயில் கிழக்காலே படம் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆக்‌ஷன் ஹீரோ காதல் ஹீரோவானார். அதன் பின் அதே ஆண்டில் வெளியான ஊமை விழிகள் விஜய்காந்த் யார் என தமிழ் திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. நடிகர் மட்டுமல்ல பொறுப்பான தலைமைப்பண்பு கொண்டவர் விஜயகாந்த் என்பதை உணர்த்தியது. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் முயற்சிக்கு உதவியதும் அல்லாமல் தனி ரோலில் நடித்தும் கொடுத்த ஊமை விழிகள் 70 எம்.எம் திரையில் தமிழ் திரையுலகை புரட்டிப்போட்டது.

    போலீஸ் உடையில் விஜயகாந்த்தின் மிடுக்கு எவருக்கும் வராத ஒன்று

    போலீஸ் உடையில் விஜயகாந்த்தின் மிடுக்கு எவருக்கும் வராத ஒன்று

    அதன் பின்னர் விஜயகாந்த் நடித்த நினைவே ஒரு சங்கீதம், தாணுவின் தயாரிப்பில் கூலிக்காரன், உழவன் மகன், செந்தூரப்பாண்டி, நல்லவன் பூந்தோட்டக் காவல்காரன் உட்பட பல வெற்றிப்படங்கள் என 156 படங்கள் நடித்துள்ளார். அவரது படங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய படங்கள் புலன் விசாரணை அவரது நூறாவது படமான கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர், சத்ரியன், வானத்த போல, தவசி, சொக்கத்தங்கம், ரமணா என பல படங்களைச் சொல்லலாம். வசன உச்சரிப்பிலும் கம்பீரமான நடிப்பிலும் விஜயகாந்தை மிஞ்சி எவருமில்லை எனலாம். போலீஸ் உடையில் மிடுக்கான நடிப்பை சிவாஜி கணேசனுக்கு பின் விஜயகாந்த் மட்டுமே கொடுக்க முடிந்தது.

    அவரால் ஏற்றம் பெற்ற பலர் இன்று புகழேணியின் உச்சியில்

    அவரால் ஏற்றம் பெற்ற பலர் இன்று புகழேணியின் உச்சியில்

    திரையுலக வாழ்க்கையில் விஜயகாந்தால் வாழ்க்கை பெற்றோர் பலர். இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஆரம்பகாலத்தில் காலூன்ற முயன்றபோது அவருடன் கௌரவ நடிகராக பல படங்களில் நடித்து கொடுத்தார். நடிகர் சரத்குமாரை தனது படத்தில் வில்லனாக நடிக்க வைத்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்க வைத்தவர். அவர் கதாநாயகனாக நடித்த ஏழை ஜாதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து உதவிசெய்தார்.அந்த காலத்தில் திரைப்படகல்லூரியில் பயின்றுவிட்டு வந்த பல கலைஞர்களுக்கு திரையுலக பாதை அமைத்துக்கொடுத்தவர். விஜயகாந்த். பல புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியவர்.

    உடல் நலன் பெற்று மீண்டும் அந்த கம்பீரம் திரும்பணும்

    உடல் நலன் பெற்று மீண்டும் அந்த கம்பீரம் திரும்பணும்

    இன்று பேசவே முடியாமல் முடங்கிக்கிடக்கும் விஜயகாந்த் ஒருகாலத்தில் ஆவேசமான அடுக்கு மொழி வசனங்களால் ரசிகர்களால் விரும்பப்பட்டவர். புலன் விசாரணை , கேப்டன் பிரபாகரன் படங்களில் அவரது வசனம் மிக பிரபலம். லியாகத் அலிகானின் வசனத்துக்கு உயிர்கொடுத்தவர் விஜயகாந்த். "மன்னிப்பு எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை"ரமணா படம் அவரது படங்களில் ஒரு மைல் கல். கம்பீரத்துக்கு பெயர் பெற்ற விஜயகாந்தின் படங்களில் காலால் உதைத்து சண்டை செய்வதில் பிரபலமானவர். இன்று உடல் நலிவுற்று இருக்கும் விஜயகாந்த் மீண்டும் அந்த கம்பீரத்தை பெற்று இயல்பான உடல் நலனை பெற வேண்டும் என்பது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆசை. அனைவரின் ஆசையும் அதுதான். நிச்சயம் அது நடக்க பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

    English summary
    Vijaykanth 70th Birthday Today (விஜயகாந்த் 70 வது பிறந்த நாள் இன்று): From actor Vijay to Sarathkumar, Vijayakanth was the ladder of many in cinema. Today is his 70th birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X