Vijayakanth - வேறு எந்த நடிகரும் செய்யாத விஷயம் இது.. யப்பா விஜயகாந்த்துக்கு உண்மையிலேயே பெரிய மனசுதான்
சென்னை: சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாடையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் கோலிவுட்டில் பீக்கில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பயங்கரமாக டஃப் கொடுத்த ஹீரோக்களில் முதன்மையானவர் விஜயகாந்த். கறுப்பான உருவம், சாமானிய உடல்மொழி, சிறந்த நடிப்பு, ஆக்ஷன் என ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்தார். அவரை பார்த்த அனைவருமே நம்ம ஊர்க்காரர்போல் இருக்கிறாரே என்றுதான் பேசிக்கொண்டார்கள்.

கேப்டன்: ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் அவர். ஈழ மக்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் முதன்முதலில் விஜயகாந்த்தான் உண்ணாவிரத போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அதேபோல் நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார்.
உடல்நிலை: சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவர் அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழு ஓய்வில் இருந்தார்.
உயிரிழப்பு: இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்னதாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் கவலையடைந்தனர். அதனையடுத்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவமனையில் நேற்று அட்மிட் ஆனார். இந்த முறையும் விஜயகாந்த் வீடு திரும்பிடுவார் என்று ரசிகர்களும், தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவிருக்கிறது.
செம விஷயம்: விஜயகாந்த்தின் மறைவை அடுத்து பலரும் சோகமடைந்துள்ளனர். மேலும் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோமே என்றும் கதறிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர் செய்த ஒரு விஷயம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜயகாந்த் பீக்கில் இருந்தபோது சினிமா கல்லூரி மாணவர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஆனால் ஆபாவாணன், அரவிந்த்ராஜ், ஆர்.கே.செல்வமணி போன்ற ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களை இயக்குநராக அறிமுகப்படுத்தியது விஜயகாந்த்தான். அதேபோல் ஊமை விழிகள் படத்தின் வாய்ப்பை கொடுத்து ஆபாவாணன், அரவிந்த்ராஜுக்கு கதவை திறந்துவிட்டார். முக்கியமாக அந்தப் படத்தில் நடித்ததற்காக விஜயகாந்த் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுவதும் உண்டு. சினிமா கல்லூரி மாணவர்களை மட்டுமின்றி நந்தகுமார் உள்ளிட்ட 54 பேரை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறாராம் விஜயகாந்த். உண்மையில் கேப்டனுக்கு பெரிய மனசுதான்..


Click it and Unblock the Notifications











