மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''

By Mayura Akilan

சென்னை: தனது மகன் சண்முகப்பாண்டியன் படப்பிடிப்பை மேற்பார்வையிட விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா உடன் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூன் மாதம் மலேசியா சென்று திரும்பினார். அப்போது அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது.

இதற்கிடையே அவரது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்' படத்துக்கான படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூரில் நடந்தது. இதையும் விஜயகாந்த் மேற்பார்வையிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மீண்டும் மலேசியா சென்றார்.

Vijayakanth In Malaysia

விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன், மைத்துனர் எல்.கே.சுதீஷ், ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். இங்கிருந்து பகல் 11.15 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் மூலம் மலேசியா சென்றனர்.

மலேசியாவில் சினிமா படப்பிடிப்பு தொடர்பான இடங்களை விஜயகாந்த் பார்வையிடுவார். அடுத்து அங்கு நடைபெறும் ‘சகாப்தம்' படப்பிடிப்பையும் பார்ப்பார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் முழு நலத்துடன் இருக்கிறார். என்றாலும் ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் உடல் நிலையை பரிசோதனை செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை விஜயகாந்த் மலேசியா சென்றிருந்த போது அங்குள்ள விஜயகாந்த் ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர், அப்போது ஒரு ரசிகர் திரும்ப திரும்ப வந்து அவருடன் வெவ்வேறு கோணத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம். இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் என்ற அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அதிர்ச்சி அளித்தார். இம்முறை எந்த ரசிகரின் கன்னம் வீங்கப் போகிறதோ தெரியலையே?.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X