ஆர்என்ஆர் மனோகர் மறைவிற்கு ட்விட்டரில் விஜயகாந்த் இரங்கல்

சென்னை : திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் சகோதரும் நடிகருமான மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் அறிமுகமானார்.

Recommended Video

மறைந்த R.N.R. Manohar உடலுக்கு முதல்வர் Stalin இறுதி அஞ்சலி

விஜயகாந்த், கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் மனோகரன். 2012 ம் ஆண்டு இவரது மகன் பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த பிறகு கடும் சோகத்தில் இருந்து வந்தார். அதற்கு பிறகு படங்களில் சிறிய ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார்.

மனோகரன் மரணம்

மனோகரன் மரணம்

சமீபத்தில் டாப் ஹீரோக்கள் நடித்த மாசிலாமணி, மிருதன், கைதி, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 61 வயதாகும் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மனோகரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் நரேன், சுனைனா, நகுல் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தனர். இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மனோகரின் மறைவிற்காக ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உருகிய விஜயகாந்த்

உருகிய விஜயகாந்த்

அதில் அவர், பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நான் நடித்த தென்னவன் உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளராகவும், துணை இயக்குனராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

குடும்பத்திற்கு இரங்கல்

குடும்பத்திற்கு இரங்கல்

பழகுவதற்கு இனிமையானவரும், நல்ல நண்பருமான ஆர்.என்.ஆர்.மனோகரின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் இவ்வாறு விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X