என் ஷூட்டிங்ல பூஸ்ட் தான் கொடுக்கணும்.. பரோட்டா, பாயா கொடுங்க.. வள்ளலாக வாழ்ந்த விஜயகாந்த்!
சென்னை: எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் வள்ளலாக வாழ்ந்தவர் என்றார் அது விஜயகாந்த் தான் என தயாரிப்பாளர் டி. சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏகப்பட்ட சுவாரஸ்ய த்ரோபேக் சம்பவங்களை பட்டியலிட்டு பேசியுள்ளார்.
கருப்பு எம்ஜிஆர் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த்தை வைத்து 1987ம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமானவர் டி. சிவா.

சொல்வதெல்லாம் உண்மை படத்திற்கு பிறகு வரிசையாக பூந்தோட்டக் காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாடு எப்படி இருக்கும் என்றும் கவனிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பரோட்டாவும் பாயாவும்: சில தயாரிப்பு நிறுவனங்களை உப்புமா கம்பெனி என கிண்டலடிக்க காரணமே ஷூட்டிங்கின் போது நடிகர்களுக்கும், ஊழியர்களுக்கும் வெறும் உப்புமாவையே கிண்டி போடுவார்கள் என்பதால் தான். ஆனால், விருந்து சாப்பாடு தினம் தினம் சாப்பிட வேண்டுமென்றால் விஜயகாந்த் படத்தின் ஷூட்டிங்கிற்குத்தான் போக வேண்டும் என கோலிவுட்டில் பலரும் பாராட்டும் அளவுக்கு சோறு போட்டவர் விஜயகாந்த்.
தயாரிப்பாளர் டி. சிவா சமீபத்திய பேட்டியில், பரோட்டாவும் பாயாவும் கேட்க கேட்க கொடுங்க என்றும் யாருக்கும் இல்லை என்கிற நிலையே தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கக் கூடாது என்பார் என்றார்.

பூஸ்ட் தான் கொடுக்கணும்: மத்த ஷூட்டிங் ஸ்பாட்ல தான் டீ, காபி தான் என் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாருக்கும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் கொடுங்க என்பார். மோர் எல்லாம் கொடுத்து ஏமாத்தக் கூடாது, சில்லுன்னு குடிக்கணும்னா பாதாம் பால் கொடுங்க என்பார் என பேசியுள்ளார் டி. சிவா. அதிகமா சமைக்க சொல்லுவார். உணவு வேஸ்ட்டா போகும்னு நினைக்காதீங்க எக்ஸ்ட்ரா இருந்தா பொது மக்களுக்கு அந்த உணவை கொண்டு போய் கொடுங்கன்னு சொல்லுவார் என்றார்.
சம்பளத்துல இருந்து 3 லட்சம்: ஒரு கட்டத்துல விருந்து சாப்பாட்டை பலரும் இஷ்டத்துக்கு சாப்பிட ஆரம்பிச்சு, புரொடக்ஷன் செலவே ஜாஸ்தி ஆகிடுச்சு, என்ன பண்றதுன்னே தெரியல இதை கவனிச்சிட்டாரு விஜயகாந்த்.. எக்ஸ்ட்ரா எவ்ளோ செலவாகுதுன்னு கேட்டார். ஒரு 5 லட்சம் ஆகுமான்னு கேட்டார்.. இல்லை சார் ஒரு 2 அல்லது 3 லட்சம் ஆகும்னு சொன்னேன். என் சம்பளத்துல எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டு படப்பிடிப்பு தளத்தில் யாரும் பசியோட இருக்கக் கூடாது என்றும் ருசியான சாப்பாடு எல்லாருக்கும் ஒரே மாதிரியா கிடைக்கணும்னு நினைக்கிற ஒரே ஆள் கேப்டன் தான் என டி. சிவா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











