Vijayakanth - போண்டா மணியின் கடனை அடைத்தாரா விஜயகாந்த்?.. அதெல்லாம் பொய்.. காமெடி நடிகர் பெஞ்சமின் ஓபன் டாக்
சென்னை: வடிவேலு, விவேக் ஆகியோரின் காமெடிகளில் நடித்து வெகு பிரபலமானவர் போண்டா மணி. ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் அகதியாக தமிழ்நாடு வந்து கலைத்துறையில் வென்று காட்டியவர். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் உயிரிழந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. இலங்கையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த அவர் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். இங்கு வந்து எப்படியோ பாக்யராஜின் தொடர்பு கிடைத்து சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து போண்டா சாப்பிட்டதால் அவருக்கு போண்டா மணி என்று பெயர் வந்ததாக கூறுவதுண்டு.

வடிவேலு காம்போ: பவுனு பவுனுதான் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த போண்டா மணிக்கு வடிவேலுவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு ஆரம்பத்தில் போண்டா மணியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள தயங்கினாலும் விவேக் செய்த பரிந்துரையின் அடிப்படையில் சேர்த்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் மெகா ஹிட்டடித்தன.
உடல்நலக்குறைவு: ஒருகட்டத்தில் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதனால் அவர் மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்துகொண்டார். தான் உடல்நிலை சரியில்லாதபோது தனக்கு வடிவேலு உதவி செய்ய வேண்டும் என ஓபனாகவே கேட்டார் மணி. ஆனால் வடிவேலு செய்யவில்லை. மாறாக விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் அவருக்கு உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு: டயாலிஸிஸ் செய்துகொண்ட பிறகு வாடகை கட்டவே வழியில்லாமல் வறுமையில் தவித்து வந்த போண்டா மணி தனது வீட்டில் மயங்கி விழுந்து கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கமுத்து உள்ளிட்டோர் எல்லாம் போண்டா மணி மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கடனை அடைத்த விஜயகாந்த்: இந்த சூழலில் போண்டா மணி உயிரிழந்தபோது அவருக்கு லட்சக்கணக்கில் கடன் இருந்ததாகவும் அந்தக் கடன் தொகையை அடைக்க மீசை ராஜேந்திரனிடம் காசோலையை விஜயகாந்த் கொடுத்து அனுப்பியதாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்த சூழலில் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று நடிகர் பெஞ்சமின் தெரிவித்திருக்கிறார்.
பெஞ்சமின் பேட்டி: திருப்பாச்சி, திருப்பதி, வெற்றிக்கொடிக்கட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்த பெஞ்சமின் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "போண்டா மணி சம்பந்தமாக விஜயகாந்த்தின் காதுக்கு எதுவுமே போகவில்லை என்பதுதான் உண்மை. விஜயகாந்த் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எதையும் நியாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. மீசை ராஜேந்திரன் மூல்மாக அந்தப் பணத்தை விஜயகாந்த் கொடுத்து அனுப்பியதாக சொல்கிறார்கள்.
நடந்தது இதுதான்: போண்டா மணி குடும்பத்திடம் மீசை ராஜேந்திரன் கொடுத்தது பத்தாயிரம் ரூபாய்தான். அதுவும் நடிகர் உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அந்தத் தொகையைத்தான் ராஜேந்திரன் கொடுத்தார். அப்போது அவர்களிடம், அண்ணி பிரேமலதா கேட்டதாக சொல்ல சொன்னார்கள். ஏதாவது உதவி வேண்டுமென்றால் வந்து பார்க்க சொன்னார் என்றுதான் பிரேமலதா குறித்து ராஜேந்திரன் சொல்லிவிட்டு சென்றார். விரைவில் நானும், போண்டா மணி குடும்பமும் சென்று பிரேமலதாவை சந்திக்கவிருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











