விஜயகாந்துக்காக தன் 'கேப்டன்' கனவை விட்டுக் கொடுத்த பிரேமலதா

By Siva

Recommended Video

அமெரிக்காவில் திருமண நாளை கொண்டாடும் விஜயகாந்த்- பிரேமலதா-

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 29வது திருமண நாளை மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சினிமாவில் வளர்ந்து பெரிய ஆளாக இருந்த விஜயகாந்த் பிரேமலதாவை 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்தாார். விஜயகாந்துக்கு ஏற்ற மனைவியாக உள்ளார் பிரேமலதா.

அவர்கள் தங்களின் 29வது திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த், பிரேமலதா திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் விஜயகாந்த் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்து ரசிகர்களும், தேமுதிக ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜயகாந்த், பிரேமலதாவுக்கு திருமணம் நடந்தது சுவாரஸ்யமான விஷயமாகும்.

சென்னை

சென்னை

விஜயகாந்த், பிரேமலதாவின் ஜாதகம் ஒத்துப் போயுள்ளது. பெண் பார்க்க வேலூருக்கு வர விஜயகாந்துக்கு நேரம் இல்லையாம். இதையடுத்து பிரேமலதா சென்னையில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு செல்ல அங்கு பெண் பார்க்கும் படலம் நடந்துள்ளது. திருமணம் நிச்சயமான பிறகு இவ்வளவு பெரிய நடிகருக்கா மனைவியாகப் போகிறோம் என்ற பிரமிப்பிலேயே பிரமேலதாவுக்கு பல நாட்கள் தூக்கம் வரவில்லையாம்.

பிரேமலதா

பிரேமலதா

பி.ஏ. படித்து முடித்த பிறகு ஐபிஎஸ் அதிகாரி ஆகும் கனவுடன் இருந்துள்ளார் பிரேமலதா. ஆனால் அவர் பி.ஏ. படித்து முடித்த கையோடு விஜயகாந்துடன் திருமணம் நடந்துவிட்டது. நல்ல கணவன் அமைந்த திருப்தியில் அவர் தனது ஐபிஎஸ் கனவை ஓரங்கட்டி வைத்துவிட்டார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

விஜயகாந்த், பிரேமலதா திருமணம் மதுரையில் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே விஜயகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம். முறைப்படி அவர்கள் தேனிலவுக்கு செல்லவில்லையாம்.

தேனிலவு

தேனிலவு

புது பாடகன் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள விஜயகாந்த் ஊட்டி கிளம்ப மனைவி பிரேமலதாவும் உடன் சென்றுள்ளார். அதை தான் அவர்களின் வீட்டில் தேனிலவு என்றார்களாம். முதலில் ரசிகர் மன்ற வேலைகளை பார்த்த பிரேமலதா தற்போது கணவருக்கு ஆதரவாக கட்சியை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X