விஜயகாந்த் - ராதிகா காதல் பிரேக்கப்புக்கு யார் காரணம்?.. பிரபல தயாரிப்பாளர் சொன்ன மேட்டரை பாருங்க!
சென்னை: நடிகர் விஜயகாந்த்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நடிகை ராதிகா தவியாய் தவித்து வந்ததாகவும் கடைசியில் விஜயகாந்த் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளாமல் பிரேமலதாவை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் தான் காரணம் என செவன்த் சேனல் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் புதிய பேட்டியில் கூறியுள்ளார்.
மாணிக்கம் நாராயணனின் செவன்த் சேனல் தயாரிப்பு நிறுவனத்தில் சரத்குமார் நடித்த கூலி, விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், கார்த்தி நடித்த சீனு, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன், மகிழ் திருமேனி இயக்கிய முன்தினம் பார்த்தேனே, பார்த்திபனின் வித்தகன் உள்ளிட்ட பல படங்கள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி பல கோடிகளை இழந்ததாக மாணிக்கம் நாராயணன் பல்வேறு போட்டிகளில் கூறிவருகிறார். சினிமாவில் நேர்மையாக இருந்ததுதான் தான் இப்படி கஷ்டப்படுவது அதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த்தே மிரண்டு விட்டார்: விஜயகாந்த் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் படம் ஒன்றில் நடிப்பதாக வாக்கு கொடுத்த நிலையில், அவர் நடிக்கவே இல்லை. ஒருமுறை அவரை நேரில் சந்தித்த போது படம் பண்றதா இருந்தா சொல்லுங்க? பண்ணவில்லை என்றாலும் சொல்லி விடுங்கள் என்னை சும்மா அலைய விடாதீங்க என பேசிவிட்டேன். இதுபோல தன்னிடம் யாரும் பேசியதில்லை என தங்கராஜ் என்பவர் மூலமாக விஜயகாந்த் என்னிடம் கூறினார். அதன் பின்னர் தான் விஜயகாந்த் பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன். அவருடைய நல்ல மனசுக்கு அவர் சிஎம் பஸ்ஸை மிஸ் பண்ணியது எனக்கு ரொம்பவே வருத்தம் என கூறியுள்ளார்.
நல்லது செஞ்சி இருப்பார்: விஜயகாந்த் முதலமைச்சராக ஒருமுறை வந்திருந்தால் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய நல்லது செய்து இருப்பார். ஆனால், அவர் உடல்நலக்குறைவு காரணமாக முடங்கிப் போனது பெரும் கவலையை அளித்தது. அவருடைய இறப்புக்கு எத்தனை லட்சம் மக்கள் ஒன்று திரண்டு வந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது என பேசியுள்ளார்.
ராதிகா கல்யாணம் பண்ண நினைத்தார்: விஜயகாந்த்தை எப்படியாவது ராதிகா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தர். ஆனால், விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் கடைசியாக ஏதோ செய்து பிரேமலதாவை திருமணம் செய்து வைத்துவிட்டார். அவரது முடிவு சரியா தவறா என்பது எனக்கு தெரியாது. ஆனால், விஜயகாந்தின் நல்ல மனசுக்கு அவருக்கு காதல் கை கூடாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டுள்ளேன் என பேசி பகீர் கிளப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











