கேப்டன் மகனுக்கு திருமணம்: கோவை பெண்ணுடன் திடீர் நிச்சயதார்த்தம்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் சண்முகப்பாண்டியனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்துக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஸ்மேசர்ஸ் பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இளையமகன் சண்முகப்பாண்டியன். இவர் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார். சகாப்தம், மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அடுத்தும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகனுக்கும் கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. விஜய பிரபாகரன் திருமண நிச்சயதார்த்தம் செப்டம்பர் மாதம் நடக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று எளிமையாக நடந்தது. இதில் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஏன் இந்த நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது என்று தெரியவில்லை. பெண் வீட்டார் பற்றிய விவரங்களையும் விஜயகாந்த் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











