கேப்டன் பிறந்த நாளுக்கு மகன்கள் அளித்த அன்புப் பரிசு பிஎம்டபிள்யூ கார்

Recommended Video

சிவந்த கண்களும் ஸ்மைலிங் கேப்டனும்- வீடியோ

சென்னை: தே.மு.தி.க வின் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு அவரின் மகன்கள், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் இணைந்து தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக பி.எம்.டபிள்யூ காரை வாங்கி கொடுத்துள்ளனர். கேப்டன் விஜயகாந்தின் உடல் நிலை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர் பெற்ற பிள்ளைகள் தான் அவரது மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா, நேற்று அவருடைய கட்சித் தொண்டர்களாலும், ரசிகர்களாலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. எத்தனை எதிரிகள் அரசியலில் இருந்தாலும் தனது நற்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். அது தான் கேப்டன் விஜயகாந்த்.

Vijayakanth’s sons presented BMW car for his Birthday

நேற்றைய தினம், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் சார்பாக, பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் இணைந்து வழங்கினர். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தொண்டர்களுக்கு இனிப்பு கொடுத்து, அவர்களுடன் சில நிமிடங்கள் மனம் திறந்து உரையாடினார் கேப்டன் விஜயகாந்த்.

அவர் பேசியபோது ஒவ்வொருவர் மனதிலும் தோன்றிய ஒரே விஷயம், சீக்கிரம் அவர் குணமடைய வேண்டும் என்பது தான். அவருடைய பேச்சு பலருக்கு சந்தோசமாக இருந்தாலும் வார்த்தை தெளிவு சீக்கிரம் வர வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் வேண்டுதலும்.

இந்நிலையில், தந்தைக்காக விஜயகாந்தின் மகன்கள், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் இணைந்து விலை உயர்ந்த கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளனர். மகன்கள் ஆசையாக கொடுத்த பரிசை விஜயகாந்த் ஆனந்தக் கண்ணீர் மல்க பெற்று கொண்டு, இருவரையும் கட்டி பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

Vijayakanth’s sons presented BMW car for his Birthday

இந்த கார் தற்போது மாலை அணிவிக்கப்பட்டு தே.மு.தி.க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சமீப காலமாக, கடன் பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், கடன் இருந்தாலும் பரவாயில்லை தங்களுடைய தந்தையின் சந்தோஷம் தான் முக்கியம் என மகன்கள் இந்த விலை உயர்ந்த பரிசின் மூலம் நிரூபித்துள்ளனர்.

கேப்டனும் மகன்களின் அன்புப் பரிசை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டுள்ளார். எத்தனையோ பிரச்சனைகள் வாழ்க்கையில் இருந்தாலும் தனது இரண்டு மகன்களும் விஜயகாந்திற்கு மிக பெரிய மனோபலம்.

அப்பா பாசம் காட்டும் இந்த அன்பு மகன்கள் சினிமாவிலும் அப்பாவின் ஆசிர்வாதத்தில் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் அவருடைய நலம் விரும்பிகள் வேண்டுவது. அதற்கு ஏற்றார்போல், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பாடல் அடிக்கடி விஜயகாந்த் அவர்களது காரில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

மகன்(கள்) தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X