twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பறந்து பறந்து கால்களால் அதிரடி காட்டிய விஜயகாந்த்: 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய டாப் 5 திரைப்படங்கள்

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகாந்த இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

    Recommended Video

    'விஜயகாந்த் மாதிரி யாரையும் பாக்கல..'- SA Chandrasekhar Interview | Part 1 | Filmibeat Tamil

    விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழில் அதிகமான ஆக்சன் படங்களில் நடித்தவர் பட்டியலில் விஜய்காந்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

    ரஜினி தயக்கம், கமல் முடக்கம்..எம்ஜிஆருக்கு பின் சாதித்த விஜயகாந்த் ரஜினி தயக்கம், கமல் முடக்கம்..எம்ஜிஆருக்கு பின் சாதித்த விஜயகாந்த்

    யதார்த்தங்களை உடைத்தெறிந்த கலைஞன்

    யதார்த்தங்களை உடைத்தெறிந்த கலைஞன்

    ஹீரோயிசத்துக்கு பஞ்சமில்லாத தமிழ்த் திரையுலகில், ரியல் ஹீரோவாக கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் சரியான படவாய்ப்புகள் அமையாத விஜயகாந்த், கிடைத்த கேரக்டர்களில் தனது திறமையை நிரூபித்துக் கொண்டே வந்தார். 1990களில் சென்னை தொடங்கி குக்கிராமங்கள் வரையிலும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்த டாப் ஸ்டார்களில் ஒருவர் விஜயகாந்த். தொழிற்போட்டியில் விமர்சகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ரஜினி, கமலுக்கு இணையான இடத்திலும் சில நேரம் அவர்களை முந்தும் இடத்திலும் விஜயகாந்த் ஜொலித்தார் என்பதே அவரது ரசிகர்களின் கருத்து.

    ஆக்சனில் புதிய பரிமாணம் படைத்தவர் கேப்டன்

    ஆக்சனில் புதிய பரிமாணம் படைத்தவர் கேப்டன்

    விஜயகாந்தின் தனித்துவமே சண்டைக் காட்சிகள் அவர் கால்களால் எகிறி எகிறி அடிக்கும் அசாத்தியம் தான். சுவரில் கால் வைத்து துள்ளிக்குதிக்கும் விஜயகாந்த், அப்படியே டைவ் அடித்து வில்லன்களை பந்தாடும் போது, திரையரங்குகளில் விசில் சப்தங்கள் விண்ணைப் பிளந்துவிடும். அவரது சண்டைக் காட்சிகளை கண்கொட்டாமல் வியந்த பார்க்கும் ரசிகர்கள், அதிலிருந்து மீளவே சிலமணி நேரங்கள் ஆகும். ஆக்சன் காட்சிகள் அப்படி தூள் பறத்தியவர் கேப்டன் விஜயகாந்த். அவரது படங்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டவையாக இருந்தாலும், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட் எப்போதுமே தனித்துவமானது தான்.

    புது நம்பிக்கையை கொடுத்த ஊமை விழிகள்

    புது நம்பிக்கையை கொடுத்த ஊமை விழிகள்

    திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பெருமைமிகு அடையாளமாக வெளியானது ஊமை விழிகள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்ததே, ஊமை விழிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி எனலாம். காதல், ரீமேக் படங்கள் என சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை, 'சஸ்பென்ஸ் திரில்லர்' பக்கம் திசை திருப்பிய படம் ஊமை விழிகள். திரைப்படக் கல்லுாரி மாணவர்களுக்காக, சம்பளம் வாங்காமலும், வயதான தோற்றத்திலும் நடித்தார் விஜயகாந்த். முன்னணி நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த காலகட்டத்தில், விஜயகாந்த் வயதான தோற்றத்தில் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

    மாபெரும் சகாப்தமாக மாறிய சத்ரியன்

    மாபெரும் சகாப்தமாக மாறிய சத்ரியன்

    மணிரத்னம் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த ஒரேபடம் தான் இந்த ‘சத்ரியன்.' இந்தப் படத்தில் தனது ஃபேவரைட்டான காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்த விஜயகாந்த், ரொம்பவே அண்டர்ப்ளே செய்து மிரட்டியிருப்பார். நடிப்பிலும் விஜயகாந்த் அதகளம் செய்திருப்பார். தமிழ் சினிமாவில் போலீசுக்கு என புது இலக்கணமும் படைத்தது சத்ரியன் தான். இரண்டே பாடல்கள், நறுக்கென வசனங்கள், பரபரப்பான திரைக்கதை, நச்சுன்னு ஒரு ப்ளாஷ்பேக் என டிரெண்ட் செட்டர் படமாக வெளிவந்தது சத்ரியன். இப்படத்தின் திரைக்கதையை மணிரத்னம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. .

    மெகா ஹிட் கொடுத்த கேப்டன் பிரபாகரன்

    மெகா ஹிட் கொடுத்த கேப்டன் பிரபாகரன்

    ரஜினி, கமல் ஆகியோரின் நூறாவது படங்கள் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், விஜயகாந்தும் அவரது நூறாவது படமான கேப்டன் பிரபாகரனில் நடித்தார். செல்வமணி இயக்கத்தில் விஜயகந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான இப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நூறாவது படித்தில் சதமடித்த பெருமையையும் கேப்டன் விஜயகாந் தட்டிச் சென்றார். வீரப்பனை கற்பனை கதாபாத்திரமாக கொண்டுவந்து அவரை பிடிக்கும் போலீஸ் கேரக்டரில் அசத்தியிருப்பார் விஜயகாந்த். இந்தப் படத்தில் இருந்தே விஜயகாந்த் கேப்டன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆக்சன் அதிரடியில் வெளியான சேதுபதி ஐபிஎஸ்

    ஆக்சன் அதிரடியில் வெளியான சேதுபதி ஐபிஎஸ்

    கேப்டன் பிரபாகரன் படத்தின் வெற்றிக்குப் பின்னர், தமிழ் சினிமாவில் போலீஸ் கேரக்டர் என்றாலே அது விஜய்காந்த் தான் என முடிவாகிப் போனது. காக்கிச் சட்டையில் கம்பீரமாக மாஸ் காட்டும் நடிகராக விஜயகாந்த் வலம்வந்தார். அந்த வரிசையில் பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சேதுபதி ஐபிஎஸ்' திரைப்படம், இன்னொரு தரமான வெற்றியைக் கொடுத்தது. இதிலும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் தில்லான போலீஸ் அதிகாரியாக நடித்து அமர்க்களம் செய்திருப்பார் விஜயகாந்த்.

    மாணவர்களை கொண்டாட வைத்த ரமணா

    மாணவர்களை கொண்டாட வைத்த ரமணா

    விஜயகாந்தின் கேரியரில் ரொம்பவே மிக முக்கியமான படமாக அமைந்தது ரமணா. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கல்லூரி பேராசிரியராக விஜயகாந்த் நடித்திருந்த இப்படம், பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. அதுவரை போலீஸ் யூனிபார்மில் ஆக்சனில் மிரட்டி வந்த கேப்டன், முதன்முறையாக வேறலெவலில் கெத்து காட்டினார். சமூகத்துக்கு கருத்து சொன்னதோடு, கமர்சியலாகவும் ஹிட் அடித்து அனைவரையும் வியக்க வைத்தது ரமணா. இந்தப் படம் விஜயகாந்துக்கு அட்டகாசமான க்ளாசிக் சினிமா என ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

    English summary
    Tamil film industry's leading actor Vijayakanth is celebrating his 70th birthday today. Here's a list of the best action movies that '90s kids will celebrate with him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X