எங்க வீட்டுப்பிள்ளை விஜய்.. கோட் படத்துல கேப்டன் வர சீன் எப்படி இருக்கும் தெரியுமா?.. பிரேமலதா பளிச்
சென்னை: கோலிவுட்டில் ஏஐ மூலம் விவேக், நெடுமுடி வேணுவின் காட்சிகள் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற நிலையில், அடுத்ததாக கேப்டன் விஜயகாந்தையே கொண்டு வருகிறோம் என 'கோட்' படத்தில் பெரிய சம்பவத்தையே செய்து முடித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
தளபதி விஜய் மாதிரி ஒரு ஹீரோ கிடைத்தால் ஏலியன் படமே தாராளமாக எடுக்கலாம் என வெங்கட் பிரபு ஏற்கனவே பழைய பேட்டிகளில் கூறியிருந்த நிலையில், மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுக்கு இதே போல வித்தியாசமான ஒரு படத்தை செய்வோம் என விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

விஜய் படம் சான்ஸ் கிடைத்ததும் அந்த படத்திற்கு ' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனக்கு டைட்டில் வைத்தது முதல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்களை களம் இறக்கியது வரை ஏகப்பட்ட சம்பவங்களை சத்தமில்லாமல் செய்துள்ளார் வெங்கட் பிரபு.
நட்சத்திர பட்டாளம்: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. பிரசாந்த் மற்றும் பிரபுதேவா என 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான லெஜண்டுகளை விஜய்யுடன் ஒன்றாக ஒரே பிரேமில் ஆடவைத்து மாஸ் காட்டிவிட்டார் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், டிரெய்லரில் இடம்பெற்ற பிஜிஎம்மை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த்: செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சுமார் 17 படங்களில் நடித்துள்ளார். கோட் படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை கொண்டு வரும் முயற்சியில் வெங்கட் பிரபு செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கோட் படத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், கோட் டிரெய்லரில் அந்த காட்சியை ரிவீல் செய்யாமல் ஈஸ்டர் எக்காக வைத்துள்ளது சிறப்பு.

எங்க வீட்டுப்பிள்ளை: வெங்கட் பிரபு இது குறித்து தன்னிடம் பேசியபோது விஜய் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு என்னால் நோ சொல்ல முடியாது. மேலும், கேப்டன் விஜயகாந்த் இடத்தில் இருந்துதான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சின்ன வயதிலிருந்து விஜய் மீது விஜயகாந்த்துக்கு ரொம்பவே பாசம் அதிகம். அவர் இருந்திருந்தால், நிச்சயம் தடை சொல்லி இருக்க மாட்டார் என ஏற்கனவே சொன்ன பிரேமலதா தற்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது எழுப்பிய கேள்விக்கு விஜய் எங்க வீட்டுப்பிள்ளை என்றும் கேப்டனை கோட் படத்தில் பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவே தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய் வீட்டுக்கு வந்தார் என்றார்.

கேப்டன் வர இடம்: கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் இடம் ரொம்பவே பிரம்மாண்டமாக வந்திருக்கும்மான்னு விஜய் சொன்னார். நிச்சயம் இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும். சினிமாவில் நீங்க தான் எனக்கு வழி காட்டி அண்ணா என சண்முக பாண்டியன் விஜய்யிடம் சொன்ன போது, அரசியலில் விஜய பிரபாகர் தான் எனக்கு சீனியர் என்றும் பத்திரிகையாளர்களை அவர் கையாளும் விதமும் அருமையாக உள்ளது என்றும் விஜய் கூறினார் என பிரேமலதா வெளிப்படையாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











