Vadivelu - என்ன கூட கூட பேசுற.. வடிவேலுவுக்கு பளார் விட்ட விஜயகாந்த்.. பிரச்னைக்கு காரணம் இதுதானா?
சென்னை: Vadivelu (வடிவேலு) ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து வடிவேலுவை விஜயகாந்த் அறைந்துவிட்டதாகவும் அதனால்தான் இருவருக்கும் பிரச்னை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் வடிவேலு. படிப்படியாக உயர்ந்து தமிழின் நகைச்சுவை அடையாளங்களில் ஒருவராக மாறியிருக்கிறார். அவர் அறிமுகமான புதிதில் சின்ன சின்ன ரோல்களே கிடைத்தன. அதை எல்லாம் தனது தனித்துவமான உடல் மொழி, நடிப்பின் காரணமாக பலரது கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

ஏறி மிதித்த கவுண்டமணி: வடிவேலு சென்னைக்கு வந்து அலைந்து திரிந்து வாய்ப்பு தேடவில்லை. மதுரையில் இருந்தபோது ராஜ்கிரண் பார்வையில் பட; பிறகு சினிமாவுக்குள் வந்தார். இது கவுண்டமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருபடத்தின் ஷூட்டிங்கின்போதுகூட சென்னையில் அவ்வளவு பேர் வாய்ப்புக்காக அலைகிறார்கள். நீ எங்கேர்ந்தோ ஒருத்தன கொண்டு வந்திருக்க என ராஜ்கிரணிடம் கவுண்டமணி சொல்லியும் இருக்கிறார். அதுமட்டுமின்றி வடிவேலுவை கவுண்டமணி மிதிக்கும்படியான காட்சியில் உண்மையிலேயே வடிவேலுவை மிதித்த கதையெல்லாம் உண்டு.
ரோல் கொடுக்க சொன்ன விஜயகாந்த்: அதுமட்டுமின்றி சின்னகவுண்டர் படத்திலிருந்து வடிவேலுவை தூக்க வேண்டும் என கவுண்டமணி சொல்ல விஜயகாந்த்தோ தனக்கு குடை பிடிக்கும் ரோலை வடிவேலுவுக்கு கொடுங்கள் என இயக்குநரிடம் சிபாரிசு செய்ததுண்டு. இப்படி பல இடைஞ்சல்களை சந்தித்தவர் வடிவேலு. ஆனால் அவர் வளர்ந்த பிறகு எல்லோரையும் மறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு சமீபமாகவே அதிகம் கேட்கிறது.
தொடர் குற்றச்சாட்டுக்கள்: அதுமட்டுமின்றி பிறரது வாய்ப்பை தட்டி பறிப்பார். யாரையும் வளரவிடமாட்டார் என்றும் அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் வளர்த்துவிட்ட ராஜ்கிரண், விஜயகாந்த்தை மறந்துவிட்டார் என்றும் பலர் கூறுவார்கள்.குறிப்பாக விஜயகாந்த்தை எல்லைக்கு மீறியே விமர்சனம் செய்துவிட்டார் என்றும் பலர் சொல்வதுண்டு. விஜயகாந்த்துக்கும் வடிவேலுவுக்கும் முட்டிக்கொண்டதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

பளார் விட்ட விஜயகாந்த்: அதாவது, ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநர் சொன்ன வசனத்தை பேசாமல் வடிவேலு தானாகவே பேசிக்கொண்டிருந்தாராம். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் இந்த விஷயத்தை விஜயகாந்த் காதில் போட்டிருக்கிறார் இயக்குநர். ஷாட்டின்போது வடிவேலு வேறு பேச அதை பார்த்த விஜயகாந்த், என்ன நீயா ஒன்னு பேசுற இயக்குநர் சொல்றத பேசு என கூறினாராம்.
அதற்கு வடிவேலுவோ இல்லை அண்ணே அது நல்லா இல்லை அண்ணே என சொன்னாராம். சரி நீயா பேசுறத இயக்குநர்ட்ட சொல்லு. அவருக்கு சரினா பேசிக்கோ என கூற மீண்டும் வடிவேலு அது நல்லா இருக்காது அண்ணே என சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த விஜயகாந்த் வடிவேலுவை பளார் என்று அறைந்துவிட்டாராம். இதுதான் விஜயகாந்த் மீது வடிவேலுவுக்கு கோபம் ஏற்பட்ட முதல் புள்ளி என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











