லியோவை தொடர்ந்து GOAT-க்கும் வன்மத்தை கக்கும் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் மகன் பதில் இதுதான்!
சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் என்பதை நம்பும் மீசை ராஜேந்திரன் விஜய்யின் லியோ படம் 600 கோடி வசூல் என்பதை ஏற்கவே இல்லை. மேலும், வசூல் சண்டையை தாண்டி தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை தொடர்ந்து அவர் தாக்கி ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டார். மேலும், யூடியூப் சேனல்களில் அமர்ந்துக் கொண்டு விஜய்க்கு எதிராக பேசி லியோ தோல்விப் படம் என்றார்.
தற்போது அதே போல வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் கோட் படத்துக்கும் தொடர்ந்து நெகட்டிவிட்டியை பரப்பி விஜய்யை விளாசி வருகிறார் மீசை ராஜேந்திரன்.

கோட் படத்தில் விஜயகாந்த் இடம்பெற்ற காட்சி சிறப்பாகவே இல்லை என்றும் கேப்டனை அசிங்கப்படுத்தி விட்டனர் என்றும் குற்றம்சாட்டிய நிலையில், கோட் படத்தை பார்த்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அதற்கு பதில் அளித்துள்ளார்.
லவ் டுடேவுக்கு சொல்லல: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற தனி ஒருவன் மற்றும் லவ் டுடே படங்களுக்கு அர்ச்சனா கல்பாத்தி ஏன் எந்தவொரு பாக்ஸ் ஆபிஸ் நம்பரையும் சொல்லவில்லை. ஆனால், விஜய்யின் கோட் படத்துக்கு மட்டும் ஏன் இப்படி வசூல் அறிவிப்பை வெளியிடுகிறார். இவங்களே சொல்றாங்களா? அல்லது இவங்கள சொல்ல வைக்கிறாங்களா என மீசை ராஜேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய் மீது வன்மம்: ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசி வரும் மீசை ராஜேந்திரன் விஜய்க்கு எதிரான கருத்துக்களை லியோ படத்தில் இருந்து பேசி வருகிறார். லியோ படம் டிசாஸ்டர் என சொல்லி வந்த மீசை ராஜேந்தர் தற்போது கோட் படம் தோல்விப் படம் எனக் கூறி வருகிறார். மேலும், விஜயகாந்தின் காட்சி குறித்தும் கடுமையான விமர்சனங்களை மீசை ராஜேந்திரன் அடுக்கியுள்ளார்.
விஜயகாந்த் மகன் பதில்: சமீபத்தில், தனது தம்பி சண்முகப் பாண்டியன் உடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை விஜய பிரபாகரன் தியேட்டரில் கண்டு ரசித்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கேப்டன் வரும் காட்சியெல்லாம் கூஸ்பம்ப்ஸ் ஆக இருந்தது என்றார். மீசை ராஜேந்திரன் கோட் படம் குறித்து கடுமையாக பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜய பிரபாகரன் அவருடைய கருத்து தனிப்பட்ட கருத்து. அப்பா இருந்தாலே படத்தில் இந்தக் காட்சியை ஏற்றிருப்பார். செந்தூரப்பாண்டி படத்தில் அப்பாவை உட்கார வைத்து விட்டு தளபதியை சண்டை போட வைக்கவில்லையா? இது சினிமா சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும் என மீசை ராஜேந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விஜய பிரபாகரன்.
2வது வாரம் கல்லா கட்டுமா?: டொவினோ தாமஸ் நடித்த மலையாள படமான ஏஆர்எம் மட்டுமே இந்த வாரம் வெளியாகி உள்ள நிலையில், தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் இந்த வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வரிசையாக ஓடி தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தைத் தொடர்ந்து அரசியல் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications