விஜயகாந்த் மகன் நடிக்கும் படம் சகாப்தம் - டிசம்பர் 12-ல் தொடங்குகிறது!
சென்னை: விஜயகாந்த்இளையமகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாகக் களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அவரது முதல் படம் சகாப்தம், வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது.
இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் எல்கே சுதிஷ் தயாரிக்கிறார்.
நவீன் கேபிபி கதை எழுத, வேலுமணி வசனம் எழுத, டி இ சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

இந்த படத்தின் பூஜை வரும் 12-12-2013 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சாலிகிரமாத்தில் உள்ள ஆண்டள் ஆழகர் இல்லத்தில் நடக்கிறது. விஜயகாந்த், பிரேமலதா மற்றும் திரையுலகினர், கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஹீரோயிந் உள்ளிட்ட விவரங்களை பூஜையன்று அறிவிக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications