விஜயகாந்த் மகன் படம்... ஒரு கோடி ரூபாயில் செட்.. சிறப்புத் தோற்றத்தில் கேப்டன்!!

By Shankar

விஜயகாந்த் நடித்த வல்லரசு, நரசிம்மா, தென்னவன், சுதேசி, அரசாங்கம், விருதகிரி போன்ற வெற்றி படங்களை தயாரித்த எல்.கே.சுதீஷ் இப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ஆழியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 20 நாட்கள் நடைபெற்றது. அங்கே சுமார் ஒருகோடி செலவில் ஆயிரம் துணை நடிகர்கள் முன்னிலையில் இருநூறு நடனகலைஞர்கள் பங்கேற்க ஆறு நாட்கள் ஒருபாடல் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.

Vijayakanth son's Sagaptham movie updates

இப்பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்தார். இதில் நாயகன் சண்முகப்பாண்டியனும், நாயகி நேகாவும் பங்கேற்றனர்.

தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகின்றனர்.

இதில் நாயகிகளாக மிஸ்-இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலை தயாரிப்பாளர் சுதீஷ் அவர்களின் நட்பிற்காக பாடிக்கொடுத்ததாக சிம்பு தெரிவித்தார்.

படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X