Vijayakanth: கேப்டன் டாய்லெட் போனாக்கூட சண்முகப்பாண்டியன் கழுவி விடுவாரு.. பிரேமலதா நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படைத் தலைவன் படத்தின் மூலம் விரைவில் ஹீரோவாக உள்ள நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு நடிகை பிரேமலதா மற்றும் சண்முகப்பாண்டியன் இருவரும் அளித்த பேட்டி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியன் என நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு இரு சிங்கக்குட்டிகள் உள்ளனர். ஏற்கனவே இருவரும் சில படங்களில் நடித்திருந்தாலும், பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், படைத்தலைவன் படம் சண்முகப்பாண்டியனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பது அதன் டீசரை பார்த்தாலே தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் சண்முகப்பாண்டியனின் குணம் குறித்து பிரேமலதா பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்பா தான் எனக்கு உயிர்: நடிகர் சண்முகப்பாண்டியன் பேசும் போது எப்போதுமே அம்மாவுடன் தான் இருப்போம். ஆனால், அம்மா ரொம்பவே ஸ்ட்ரிக்ட் எந்த விஷயத்தையும் செய்ய விட மாட்டாங்க.. அதுக்காகவே அப்பா எப்போ வீட்டுக்கு வருவாருன்னு பார்த்துட்டு இருப்பேன். அப்பா வந்த உடனே அவர் கூட ஜாலியா சண்டை போடுவேன், சம்மர் சால்ட், பல்டி, வீட்டில குரங்கு போல ரேக் மேல எல்லாம் ஏறி தொங்கி விளையாடி குதிக்க எல்லாம் அப்பா தான் அலோ பண்ணுவாரு எப்பவுமே பயப்படக் கூடாது, தைரியமா இருக்கணும்னு சொல்லி சொல்லி வளர்ப்பாரு என சன்முகப்பாண்டியன் தனது தந்தை விஜயகாந்த் பற்றியும் அவர் குடும்பத்தில் எப்படி அன்பு செலுத்தி குழந்தைகளை வளர்த்தார் என்பது குறித்தும் பேசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

டாய்லெட் கூட கழுவி விடுவான்: கேப்டன் நல்லா இருந்த வரைக்கும் வீட்டிலேயே இருக்க மாட்டாரு, சினிமா இருக்கும் போது ஷூட்டிங் போயிட்டாருன்னா அந்த படத்தை முடிச்சிட்டுத் தான் வருவாரு, அவருக்காக ரொம்பவே ஏங்கியிருக்கோம். அரசியல் பணிகள் ஆரம்பித்த போது கூட மக்களுக்காகத்தான் ஓடிக் கொண்டே இருப்பார்.
ஆனால், இப்போ உடம்பு முடியாத நிலையில், எங்க கூடத்தான் 24 மணி நேரம் இருக்காரு, எதை நினைச்சு சந்தோஷப்படுறதுன்னே தெரியல.. ஷண்முகப்பாண்டியனும், விஜய் பிரபாகரன் இருவருமே அவங்க அப்பாவை அப்படி பார்த்துப்பாங்க.. எந்த கூச்சமும் படாமல் சண்முகப்பாண்டியன் கேப்டன் டாய்லெட் போனாக்கூட கழுவி விடுவார், அதே மாதிரி குளிப்பாட்டி க்ளீனா வச்சிப்பாங்க, நான்லாம் அதை பண்ணமாட்டேன் ரெண்டு பேரும் எப்போதும் மூஞ்சி காட்டுனதே இல்லை அந்த அளவுக்கு அப்பான்னா அவ்ளோ உயிர் என பிரேமலதாவும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











