விஜயகாந்த் மகன் பிறந்தநாள்.. அரை டவுசருடன் சண்முக பாண்டியன் ஆக்ஷன்.. படை தலைவன் டீசர் இதோ!
சென்னை: விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை அப்பாவுடன் பிறந்தநாளை கொண்டாடி வந்த சண்முக பாண்டியன் முதல் முறையாக தந்தை இல்லாமல் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் சமூக வலைதள பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் விஜயகாந்த் மகன்.
சண்முக பாண்டியன் பிறந்தநாள்: விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாக மாறியது. இன்னமும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சமாதியை தினந்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் பார்த்து செல்கின்றனர். விஜயகாந்த் மறைவால் வாடிவந்த இளைய மகன் சண்முக பாண்டியன் இன்று தனது 31வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி உள்ளார்.
படை தலைவன் பர்த்டே பிளாஸ்டர்: அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படை தலைவன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், சண்முக பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு பர்த்டே பிளாஸ்டர் என இன்னொரு டீசர் வெளியாகி இருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரை டவுசருடன் ஆக்ஷன்: அரை டவுசர் என்றாலே ராமராஜன் தான் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வருவார். ஆனால், படை தலைவன் வெளியான பின்னர் சண்முக பாண்டியனும் அந்த லிஸ்ட்டில் இடம்பெறுவார் என்றே தெரிகிறது. தற்போது வெளியாகி உள்ள டீசரில் ஆக்ஷன் காட்சிகள் முழுவதும் அரை டவுசர் அணிந்த படியே சண்டைப் போட்டு வில்லன்களை பறக்க விடுகிறார்.
கும்கி படம் போல: விக்ரம் பிரபுவுக்கு ஒரு கும்கி படம் போல சண்முக பாண்டியனுக்கு படை தலைவன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுக்க யானையுடன் யானை பாகனாகவே சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். விஜயகாந்த் ஆசியுடன் என போட்டு தற்போது வெளியாகி உள்ள ஆக்ஷன் பேக்ட் டீசர் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது. ரசிகர்கள் பலரும் சண்முக பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











