நாங்க செத்தாலும் அது மட்டும் நிக்கவே கூடாது.. கொம்பு சீவி புரோமோசனில் விஜயகாந்த் மகன் பேச்சு
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சண்முக பாண்டியன் மிகவும் கவனமாகவே கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படி இருக்கும்போது அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கொம்பு சீவி. முதலில் இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் படத்தை வரும் 19ஆம் தேதியே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து அதற்குண்டான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது.
படத்தை ஜனரஞ்சகமான படம் என்றாலே இவர்தான் என்று ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் படம் வெளியாகவுள்ளது. படத்தில் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தொடங்கி டிரைலர் வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கொம்பு சீவி: இப்படி இருக்கும்போது படத்தின் புரோமோசன் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சண்முக பாண்டியன் பேசும்போது சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவரது தந்தையான கேப்டன் விஜயகாந்த் மறைந்த பின்னர், அவரது உடலை நல்லடக்கம் செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து அவரும் அவரது அம்மா பிரேமலதா அண்ணன் விஜய பிரபாகரன் என மூவரும் இணைந்து ஒரு முடிவு எடுத்ததாகவும், அந்த முடிவை சாகும் வரையிலும் சரி, மறைந்த பின்னரும் சரி பின்பற்ற வேண்டும் என்று தீர்க்கமான முடிவு எடுத்ததாக கூறினார்.
முடிவு: அவர் பேசும்போது, " அப்பாவின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு நானும் அண்ணனும் அம்மாவும் வீட்டுக்கு வந்து ஒரு முடிவு எடுத்தோம். அதாவது என்ன ஆனாலும் சரி, அப்பா எப்படி அன்னதானம் செய்து கொண்டு இருந்தாரோ அதேபோல் நாமும் அன்னதானம் செய்ய வேண்டும். அதை நமது கடைசி காலம் வரையிலும் நாளை நமது குழந்தைகள் வந்த பின்னர் அவர்களையும் இந்த அன்னதானத்தை தொடரச் செய்யச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததாக மிகவும் எமோஷனலாகவும் உறுதியாகவும் கூறினார். சண்முக பாண்டியன் இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இளம் விஜயகாந்த்: கொம்பு சீவி படத்தில் சண்முக பாண்டியனின் லுக் என்பது பார்ப்பதற்கு இளமைக் காலத்து விஜயகாந்த்தைப் பார்ப்பது போல இருப்பதாக டிரைலர் மற்றும் டீசரைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வரும் 28ஆம் தேதியுடன் கேப்டன் விஜயகாந்த் மறைந்து இரண்டு ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











