அவதார் 3 படத்துடன் தில்லாக மோத களமிறங்கிய கேப்டன் மகன்.. LIK வெளியே.. கொம்பு சீவி உள்ளே!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படம் வருவதை முன்னிட்டு தலா வந்தா தள்ளித்தான் போகணும் என டிராகன் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதனுக்கு விடாமுயற்சி படத்தை விட மிகப்பெரிய வெற்றியை அந்த படம் கொடுத்தது.
அதே போல தற்போது அவதார் 2 படம் வந்தால் தள்ளித்தான் போக வேண்டும் என்கிற ரீதியில், நிதி சிக்கல் காரணமாக டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவித்து 2வது சிங்கிளாக பட்டும்மா பாடலை எல்லாம் வெளியிட்ட நிலையில், அடுத்த ஆண்டு தான் படம் வெளியாகும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், அவதார் படத்தின் 3ம் பாகமான அவதார்: ஃபயர் அண்ட் தி ஆஷ் படத்துடன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படம் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி: தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றிப் படங்களை போல அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு இன்னமும் பெரிதாக ஏதும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பல தடைகளை தாண்டி வெளியான படைவீரன் திரைப்படமும் பெரிதாக ஓடவில்லை. சண்முக பாண்டியனை வைத்து ரமணா 2 எடுப்பேன் என ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன நிலையில், அந்தப் படமும் ஆரம்பம் ஆகுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.
கொம்புசீவி வருது: சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படம் வரும் டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கும் என படக்குழு நம்புகிறது. டியூட் படத்தைத் தொடர்ந்து சரத்குமார் இந்த படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்வார் என்பது உறுதி.

அவதார் 3 உடன் மோதல்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் அடுத்த வாரம் டிசம்பர் 19ம் தேதி வெளியாகிறது. டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட எல்ஐகே திரைப்படம் தள்ளிப்போகவுள்ள நிலையில், கொம்புசீவி படத்தை களமிறக்குகின்றனர்.


Click it and Unblock the Notifications











