விஜயகாந்த் மகனின் புதிய படம்.. சிவகார்த்திகேயனுக்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் இவருக்கும் தருவாரா?

சென்னை:கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள். அவர்களில் சண்முக பாண்டியன் சினிமாக்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா ஆசையின்பால் சென்னைக்கு வந்து இங்கு பல கஷ்டங்களை சந்தித்தவர். ஒருவழியாக அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து மிளிர தொடங்கினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பீக்கில் இருந்தபோது தனக்கென ஒரு கோட்டையை உருவாக்கி அதில் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். உருவத்திலும், நடிப்பிலும் ஊர்க்காரர் போல் இருந்ததால் அவரை தங்களில் ஒருவராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

Vijayakanth Shanmuga Pandiyan

உச்சத்தில் விஜயகாந்த்: வில்லனாக அறிமுகமானாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து அதை சாதித்தும் காட்டியவர். ஒரே வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து படுபிஸியாகவும் திகழ்ந்துகொண்டிருந்தார். ரஜினிகாந்த், கமலுக்கு அவர்களது 100ஆவது படம் சரியாக போகவில்லை. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு: அதேபோல் திரைப்பட கல்லூரியிலிருந்து இயக்குநராகும் கனவோடு வெளியே வந்த பலருக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது விஜயகாந்த்தான். அதுமட்டுமின்றி பல இயக்குநர்கள் விஜயகாந்த்தை வைத்துதான் முதல் படத்தை இயக்கினார்கள். அந்த அளவுக்கு புதுமுகங்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தவர். மேலும் சினிமாவில் இருப்பவர்கள் எந்தவித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக தனது அலுவலகத்தில் தொடர்ந்து உணவு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு: இயக்குநர்கள் மட்டுமின்றி விஜய், சூர்யா போன்ற வளர்ந்துவந்த நடிகர்களின் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து அந்தப் படங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் விஜயகாந்த். சூழல் இப்படி இருக்க அரசியலில் நுழைந்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவர் சந்தித்த சில துரோகங்கள் அவரை சாய்த்தது. அதன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.

சண்முக பாண்டியனின் படம்: இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியனும் சினிமாவில் நடிக்கிறார். அவர் அறிமுகமான சகாப்தம் படம் ஒழுங்காக போகவில்லை. இதனையடுத்து இப்போது படைத்தலைவன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இன்று விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் படக்குழுவினர் நல்லாசியும் பெற்றனர். சிவகார்த்திகேயனுக்கு பொன்ராம் எப்படி இரண்டு மெகா ஹிட்டுகளை கொடுத்தாரோ அதேபோல் சண்முக பாண்டியனுக்கும் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X