விஜயகாந்த் வீட்டிலிருந்து விரைவில் நல்ல செய்தி?.. ரொம்ப நாளா தள்ளிப்போனது நடக்கப்போகுதாம்

சென்னை: விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த மாதம்தான் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி தமிழ்நாடெங்கிலுமிருந்து அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் சமாதிக்கு படையெடுத்தார்கள். சூழல் இப்படி இருக்க விஜயகாந்த் வீட்டிலிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரவிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

கேப்டன் விஜயகாந்த் என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு கிளம்பி வந்தவர் தனது திறமை, உழைப்பு, காத்திருப்பு உள்ளிட்டவைகளால் ரஜினிகாந்த், கமல் ஹாசன் பீக்கில் இருந்தபோதே ஹீரோவாக அறிமுகமானார். இரு பெரும் துருவங்களுக்கு மத்தியில் நுழைந்த அவர் தனக்கென தனியிடத்தை பிடித்தார். முக்கியமாக கிராமத்து பக்கங்களில் அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.

vijayakanth vijaya prabhakaran

தொடர் ஹிட்டுகள்: முதலில் வில்லனாக அறிமுகமான அவர் அடுத்தது ஹீரோவாக மாறினார். ஹீரோவாக மாறி வரிசையாக ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும் தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே 100ஆவது படம் ஒரு ஹீரோவுக்கு மெகா ஹிட்டானது என்றால் அது விஜயகாந்த்துக்கு மட்டும்தான். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் விஜயகாந்த்: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் சினிமாவில் பீக்கில் இருந்தபோது உள்ளே நுழைந்து விஜயகாந்த் எப்படி தன்னை நிரூபித்தாரோ; அதேபோல் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் உச்சத்தில் இருந்தபோது தேமுதிக கட்சியை தொடங்கி கெத்து காண்பித்தார் விஜயகாந்த். முக்கியமாக 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். அந்த சமயத்தில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை தைரியமாக எதிர்த்து பேசினார். ஆனால் அதற்கு பிறகு காட்சிகள் மாறின.

உயிரிழந்த விஜயகாந்த்: அதாவது அந்த சம்பவத்துக்கு பிறகு எதிர் தரப்பில் செய்யப்பட்ட சில ராஜதந்திர நடவடிக்கைகளால் விஜயகாந்த்திடமிருந்து அவரது எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்றார்கள். அதனை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தொடர்ந்து அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் பழைய விஜயகாந்த்தை பார்க்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர் சென்னையில் உயிரிழந்தார்.

நல்ல செய்தி?: இதற்கிடையே விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த்தின் உடல்நிலை காரணமாக அந்தத் திருமணம் தள்ளிப்போனது. அதனையடுத்து இவர் உயிரிழந்ததால் முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்கு பிறகு திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் குடும்பத்தினர் முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்துவிட்டதால் விரைவில் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தத் தகவல் விஜயகாந்த் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X