விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இதுதான் காரணம்.. அடித்துச் சொல்லும் இயக்குநர் பிரவீன் காந்தி!
சென்னை: எத்தனை சிகிச்சை கொடுத்தாலும் பழையபடி கேப்டனாக விஜயகாந்த் கம்பீரமாக எழுந்து நடமாட முடியாததற்கு முக்கிய காரணத்தை இயக்குநர் பிரவீன் காந்தி தனது சமீபத்திய பேட்டியில் கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இப்படி ஆக காரணமே அந்த ஒரு நிகழ்வு தான் என பரபரப்பாக பேசி உள்ளார்.

குடி பழக்கம் எல்லாம் அவரது இந்த நிலைமைக்கு காரணம் இல்லை என்றும் ஏன் வடிவேலு குடிக்க மாட்டாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் பிரவீன் காந்தி.

சிங்கம் போல இருந்த விஜயகாந்த்:
கேப்டன் என்றாலே தமிழ் சினிமாவில் அனைவர் மனங்களிலும் விஜயகாந்துக்கு என்ற தனி இடம் எப்போதுமே உண்டு. அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் விஜயகாந்த். ஜெயலலிதாவை பார்த்தே சட்ட சபையில் நாக்கை கடித்துக் கொண்டு அப்படி முறைத்த ஒரே நபர் விஜயகாந்த் தான். கொஞ்சம் யோசித்து இருந்தாலும் அதை அவர் செய்திருக்க மாட்டார். மனதில் பட்டதை அப்படியே செய்யக்கூடிய வஞ்சம் இல்லாத நெஞ்சம் கொண்டவர் என பிரவீன் காந்தி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

குடிப்பழக்கம் காரணமில்லை:
அதீத குடிப்பழக்கம் காரணமாகத்தான் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்களே அது எந்தளவுக்கு உண்மை என தொகுப்பாளர் கேட்க, வடிவேலு கூட அதை வைத்து பரப்புரை செய்தாரே என்கிற கேள்விக்கும் சேர்த்து, ஏன் வடிவேலு குடிக்க மாட்டாரா? என எதிர் கேள்வியை கேட்டு மடக்கிய பிரவீன் காந்தி, சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நல்லா சரக்கடிப்பாங்க, விஜயகாந்த் லைட் மேன் உள்ளிட்டவர்கள் கூட அமர்ந்து சரக்கடிப்பார். ஆனால், அதெல்லாம் அவரது உடல்நிலை மோசமாக ஒரு காரணமே இல்லை என ஆணித்தரமாக கூறியுள்ளார்.

நண்பர் ராவுத்தரின் மரணம்:
கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட படங்களை தயாரித்து விஜயகாந்த் சினிமாவில் பெரிய ஆளாக வளர பல வருடங்களாக கூடவே இருந்து உழைத்த நண்பர் ராவுத்தரின் மரணம் தான் விஜயகாந்தை மொத்தமாகவே மனதளவில் பாதிப்படைய செய்தது என்று பிரவீன் காந்தி தனது கருத்தை இந்த பேட்டியில் முன் வைத்துள்ளார்.
தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் 2015ம் ஆண்டு காலமானதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கத் தொடங்கியது என்றும், அதற்கான சரியான சிகிச்சையை கொடுத்தால் தான் அவரை மீண்டும் பழையபடி மீட்டெடுக்க முடியும் என்றும் மற்றபடி அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என பிரவீன் காந்தி கூறி உள்ளார். நண்பரின் மறைவை தாங்கிக் கொள்ளாமல் தனக்குத் தானே பேசிக் கொண்டும் நண்பருடன் பேசுவதை போல நினைத்துக் கொண்டு இருந்தது தான் அவரது இந்த நிலைமைக்கு காரணம் என்கிறார்.


Click it and Unblock the Notifications











